'அவங்க ரொம்ப யோக்கியம்ன்னு சொன்னிங்க'... 'வீட்டுக்குள்ள என்ன இருக்குன்னு பாருங்க'... 'இது யார் வீடு தெரியுமா'?... தாலிபான்கள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிய தினத்திலிருந்து தினம் தினம் புது புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி Ashraf Ghani உடனடியாக நாட்டை விட்டுத் தப்பி ஓடினார். அவர் தப்பி ஓடும் போது கட்டுக்கட்டாக பணம் கொண்டு சென்றதாகவும், விமானத்தில் பணத்தை ஏற்றிய நிலையில் மீதி இருந்த பணத்தை விமானத்தில் ஏற்ற முடியாமல் அங்கேயே விட்டுச் சென்றதாகவும் தகவல்கள் வெளியானது.
மக்களோடு நிற்க வேண்டிய அதிபர் இவ்வாறு தப்பி ஓடியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மக்கள் ஆபத்தில் இருக்கும் இந்த நேரத்தில் பணத்தோடு தப்பியது அதிபர் Ashrafக்கு பெரும் அவப்பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தது. ஆனால் நான் பணத்தோடு தப்பிச் செல்லவில்லை என Ashraf தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
இதற்கிடையில், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு முன்னாள் அரசு ஊழியர்களின் வீட்டிற்குள்ளும் நுழைந்து அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த Amrullah Saleh வீட்டிற்குள் நுழைந்த தாலிபான்கள், அங்கு அவருடைய வீட்டிலிருந்து சுமார் 6.5 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் 47 கோடி) பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இதற்கு முன்னர் ஆப்கானை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எவ்வளவு பணத்தைச் சேர்த்து வைத்துள்ளார்கள், இது எல்லாம் மக்களின் பணம் எனத் தாலிபான்களின் ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
Taliban say they have found 6.5M US dollars from @AmrullahSaleh2 house when they were searching. pic.twitter.com/3L1ryVWObT
— Tajuden Soroush (@TajudenSoroush) September 13, 2021