'அவங்க இங்க வர்றதே 'இது'க்காகத் தான்!'.. சீனாவின் ஜாம்பவானுக்கு செக்!.. 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட தைவான்!.. புரட்டிப்போட்ட முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்அலிபாபாவின் Taobao தளம் ஆறு மாதங்களில் அதன் தைவான் முதலீட்டை திரும்பப் பெற வேண்டும் அல்லது சீன நிறுவனமாக மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தைவான் மற்றும் சீனா இடையே அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் சீன முதலீடு மற்றும் சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த மேற்பார்வையை தைவான் முடுக்கிவிட்டுள்ளது. சீன இணைய தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவையை நிறுத்த தைவான் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ஆறு மாதங்களில் Taobao Taiwan தங்கள் முதலீட்டை திரும்ப பெற வேண்டும் அல்லது சீன முதலீடாக மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. Taobao என்பது சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் ஆல்னைன் ஷாப்பிங் இணையதளம். தைவானில் இது பிரிட்டிஷின் Claddagh Venture Investment என்ற நிறுவனத்தால் இயக்கப்படுவதாகவும், அலிபாபா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தைவானின் பொருளாதார அமைச்சகத்தின் முதலீட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, Taobao தளம் மூலம் பயனர்களின் தரவு சீனாவுக்கு அனுப்பப்படும் அச்சம் எழுந்துள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது. Taobao சீன நிறுவனமாக பதிவு செய்யமால் வெளிநாட்டு முதலீடாக பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து, அந்நிறுவனத்துக்கு 13,960 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, அறிமுகம் செய்யப்பட்ட Taobao Taiwan சீனாவில் இருக்கும் தளத்தை விட முற்றிலும் மாறுபட்டது அலிபாபா நிறுவனம் தெரிவித்திருந்தது.