அப்பா போனுக்கு வந்த ‘மர்ம’ அழைப்பு.. அட்டென்ட் பண்ணி பேசிய மகன்.. அடுத்த 5 நிமிஷத்தில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசெல்போனில் புதிதாக செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தவுடன் 9 லட்சம் பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூர் கோரடி பகுதியில் வசித்து வருபவர் அசோக் மேன்வாட். இவரது செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு கொடுத்துள்ளார். அப்போது அசோக்கின் 15 வயது மகன் செல்போனை பயன்படுத்திக்கொண்டு இருந்துள்ளார். உடனே அழைப்பை அவர் எடுத்துள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன் என கூறியுள்ளார்.
பின்னர் தான் சொல்லும் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனை அடுத்து அசோக்கின் மகன் அந்த மர்மநபர் சொன்ன செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அடுத்த 5 நிமிடத்தில் செல்போனுடன் இணைக்கப்பட்டிருந்த வங்கி கணக்கில் இருந்து சுமார் 9 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அசோக்கிடம் அவரது மகன் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே காவல் நிலையத்தில் ஆன்லைன் மோசடி தொடர்பாக புகார் அளித்துள்ளார். விசாரணையில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி, வேறொரு இடத்தில் இருந்து செல்போனை இயக்கும் ரிமோட் செயலி என்பது தெரியவந்துள்ளது. வங்கி கணக்கு குறித்து மர்ம நபர்களிடமிருந்து அழைப்பு வந்தால், அவர்கள் சொல்வதை செய்யக்கூடாது என வங்கிகள் மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.