‘ராமர்.. சீதையா??’.. கொரோனாவுக்கு எதிராக ‘இங்கிலாந்து’ பிரதமர் சொன்ன ‘இப்படி ஒரு’ ஆச்சர்யமூட்டும் உதாரணம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Behindwoods News Bureau | Nov 09, 2020 12:43 PM

உலகெங்கிலும் நவம்பர் 14-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படவிருக்கிறது. கொரோனாவுக்கு மத்தியில் சமூக விலகலோடு இங்கிலாந்தில் நடைபெற்ற 3 நாள் மெய்நிகர் தீபாவளிக் கொண்டாட்டத்தில் பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததுடன், கொரோனாவை சமாளிப்பது குறித்து நம்பிக்கையான வாழ்த்து செய்தியை வழங்கினார். மேலும், “தீபாவளி என்பது இருளை விரட்டும் ஒளியின் வெற்றி” என்றார்.

uk PM Boris johnson talk diwali and corona with rama sita example

அத்துடன் நாடு முழுவதும் கொரோனா அதிகரிப்பதைத் தடுப்பதற்காக,  2வது ஊரடங்கு டிசம்பர் 2-ம் தேதி வரை நீடிக்கும் என்று அறிவித்தவர்,  “ராவணன் என்கிற அரக்கனின் தோல்விக்குப் பிறகு பகவான் ராமனும், அவரின் மனைவி சீதாவும் மில்லியன் விளக்குகள் எரியும் வழியில் வீடு திரும்பியதைப்போலவே, நாம் கொரோனாவை வெல்ல வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அத்துடன் தீபாவளி சந்தோஷங்களை சமூக விலகலுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆன்லைனில் தீபாவளி குறித்து பிரிட்டனிலிருந்து செயல்படும் இந்தியா இன்க் (India inc) குழும தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் லாட்வா கூறுகையில், இங்கிலாந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாட்டின் முக்கிய பெருநகரங்களின் மேயர்கள் ஆன்லைன் தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை என்றும்,  இது இங்கிலாந்து-இந்தியா இடையேயான உறவின் உண்மையான ஆழத்தை உணர்த்துகிறது என்றார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Uk PM Boris johnson talk diwali and corona with rama sita example | World News.