இலங்கை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ராஜபக்ஷே எடுத்த முக்கிய முடிவு.. மக்கள் போராட்டம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Apr 08, 2022 12:58 PM

கடுமையான பொருளாதர நெருக்கடியில் தவித்துவருகிறது இலங்கை. இதனை அடுத்து கூடுதலாக வருமானம் ஈட்டுவோருக்கு அதிக வரி விதிக்கும் சட்டத்தை அமல்படுத்தி உள்ளார் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷே.

Srilankan Government Pass Tax Increase bill for high earners

கொடுத்த பணத்துக்கு கணக்கு காட்டாததால் கோபம்.. மகனை பழிவாங்க அப்பா செஞ்ச திடுக்கிடும் காரியம்..!

இலங்கை நெருக்கடி

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலையும் விண்ணை தொட்டுள்ளது. அரிசி, பிரெட், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Srilankan Government Pass Tax Increase bill for high earners

மேலும், உணவு பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் தினந்தோறும் 13 மணி நேரம் மின்வெட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

வரி

இந்நிலையில், ஆண்டுக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரிவிதிக்கும்  மசோதா, வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படாமலேயே நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. அப்போது, அனைத்து எம்.பிக்களும் சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் என்று ஆளும் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தாரக பாலசூர்யா வலியுறுத்தினார்.

Srilankan Government Pass Tax Increase bill for high earners

மக்கள் போராட்டம்

இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொது மக்கள் போராடிவரும் நிலையில், இன்று பாராளுமன்றத்திற்கு வந்த அதிபர் ராஜபக்ஷேவை சூழ்ந்து பொதுமக்கள் கோஷமிட்டனர்.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆளுங்கட்சியை சேர்ந்த கேபினெட் அமைச்சர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனை அடுத்து 4 புதிய அமைச்சர்களை அதிபர் நியமித்தார் இருப்பினும் பதவியேற்ற மறுநாளே நிதியமைச்சர் அல் ஜாப்ரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

Srilankan Government Pass Tax Increase bill for high earners

தொடரும் போராட்டம்

பொருளாதர நெருக்கடி காரணமாக இலங்கை அதிபர் பதவி விலக வேண்டும் என இலங்கை எதிர் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இலங்கையின் 275 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலகவேண்டும் என அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

"ஆமா அது என் தப்புதான்.. அதுக்காக இப்படி பண்ணாதீங்க".. இந்திய ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ஐபிஎல் வீரர்..!

Tags : #SRILANKA #SRILANKAN GOVERNMENT #TAX #INCREASE #ECONOMIC CRISIS #SRILANKAN GOVERNMENT PASS TAX INCREASE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Srilankan Government Pass Tax Increase bill for high earners | World News.