"ஆமா அது என் தப்புதான்.. அதுக்காக இப்படி பண்ணாதீங்க".. இந்திய ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ஐபிஎல் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா அணியுடனான தோல்விக்கு பிறகு, முதன் முறையாக மனம் திறந்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் அணி பவுலர் டேனியல் சாம்ஸ்.
“போன் தொலைஞ்சா இத மட்டும் உடனே பண்ணுங்க”.. எஸ்பி கொடுத்த சூப்பர் தகவல்..!
KKR Vs MI
15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேயில் நேற்று முன்தினம் நடந்த 14வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனை அடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது.
ஆரம்பம் முதலே, கொல்கத்தா பவுலர்கள் மும்பை அணி பேட்ஸ்மேன்களை ரன்கள் அடிக்க விடாமல் நெருக்கடி அளித்தனர். கேப்டன் ரோஹித் ஷர்மா 3 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சியளித்தார். அதன்பிறகு வந்த இளம் வீரரான டெவால்ட் ப்ரீவிஸ் 29 ரன்களுக்கு அவுட்டாக அதன்பிறகு திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஜோடி பொறுமையாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 161 ரன்கள் சேர்த்தது.
சேசிங்
இந்நிலையில் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா பேட்டிங் செய்ய துவங்கியது. கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் ரஹானே 7 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 10 ரன்னிலும், 2 சிக்ஸர்களை விளாசிய சாம் பில்லிங்ஸ் 17 ரன்னிலும், தலா ஒரு சிக்ஸரை அடித்த நிதிஷ் ராணா 8 ரன்னிலும், ஆண்ட்ரே ரசல் 11 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இருப்பினும் வெங்கடேஷ் அய்யர் ஒருபுறம் நிலைத்து ஆட, அப்போது களத்திற்கு வந்தார் பேட் கம்மின்ஸ். ஆரம்பம் முதலே சிக்ஸர், பவுண்டரி என விளாசிய கம்மின்ஸ் சாம்ஸ் ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடினார். அந்த ஓவரில் 4 சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகள் என விளாசி கொல்கத்தாவை வெற்றிபெற வைத்தார் கம்மின்ஸ்.
இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் சாம்ஸ்-ஐ சமூக வலைத்தளங்கள் வாயிலாக விமர்சித்துவந்தனர். இதுகுறித்து சாம்ஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்," போட்டியில் வெற்றி தோல்வி என்பது ஒரு பகுதிதான். கடந்த போட்டியில் நான் சரியாக விளையாடவில்லை. அணியின் தோல்விக்கு நான் காரணமாக அமைந்துவிட்டேன். ஆனால், அதற்காக தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது சரியானது அல்ல. டிவிட்டர் மாற்றும் இன்ஸ்டாகிராமில் இந்திய ரசிகர்கள் வசைபாடிவாருகின்றனர். தயவுசெய்து இதனை நிறுத்துங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்துவருவதாக டேனியல் சாம்ஸ் ட்வீட் செய்திருப்பது குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.