வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு.. இலங்கையில பெட்ரோல் விலை எவ்ளோ தெரியுமா?.. திணறும் மக்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Mar 13, 2022 01:39 PM

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அறிவித்ததை தொடர்ந்து, உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அதுமட்டும் அல்லாமல், கச்சா எண்ணெயின் விலை உலகளவில் அதிகரித்ததன் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. இந்நிலையில், அண்டை நாடான இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்து உள்ளது.

Petrol and diesel rates are skyrocketing in Sri Lanka

விலை உயர்வு

இலங்கையில் இயங்கி வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் விலையை 75 (இலங்கை) ரூபாய் அதிகரிப்பதாகவும் டீசல் விலையை விலையை 50 ரூபாய் அதிகரிப்பதாகவும் தெரிவித்து இருந்தது. இலங்கை அரசிடம் இருந்து சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு கிடைக்கும் மானியம் போல, இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மானியம் ஏதும் கிடைப்பதில்லை என்பதே இந்த விலை ஏற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இதனிடையே சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷனும் தன் பங்கிற்கு விலை ஏற்றத்தை அறிவித்து உள்ளது. இதனால், வரலாறு காணாத அளவு அங்கே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து இருக்கிறது.

Petrol and diesel rates are skyrocketing in Sri Lanka

சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பெட்ரோலுக்கு ரூபாய் 77 அதிகரிப்பதாகவும் டீசலுக்கு 55 ரூபாய் அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஒரு லிட்டர் எவ்வளவு?

இலங்கையில்,  எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாக பெட்ரோல் ஒரு லிட்டர் 254 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல ஒரு லிட்டர் டீசலின் விலை 176 ரூபாயாக இருக்கிறது. அதாவது ஆக்டேன் 92 பெட்ரோலின் விலை 43.5 சதவீதமும் டீசல் விலை 45.5 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இலங்கை அரசிடம் மானியம் பெறாததால்  இறக்குமதி மற்றும் உற்பத்தி செலவுகளுக்கேற்ப இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்துவருகிறது இலங்கை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்.

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரலாம் என பொதுமக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

Tags : #PETROL #DIESEL #SRILANKA #பெட்ரோல் #டீசல் #இலங்கை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Petrol and diesel rates are skyrocketing in Sri Lanka | World News.