இந்த '25' ஆப் உங்க போன்ல இருந்தா... உங்க 'ஃபேஸ்புக்' அக்கவுண்டுக்கு 'ஆப்பு' தான்... உடனே 'UNINSTALL' பண்ணுங்க... 'எச்சரிக்கிறது' கூகுள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Jul 06, 2020 07:57 PM

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அதிகம் பேர் செல்போனை தங்களின் அங்கமாக நினைத்து தங்கள் பொழுதினை கழித்து வருகின்றனர். மேலும், தங்களது செல்போனில் பல ஆப்களை பயன்படுத்தி வருகின்றனர்.

25 apps dangerous for facebook account uninstall warns google ban

சில சமயம், இப்படி நாம் பயன்படுத்தும் சில ஆப்கள் தனிப்பட்ட நபரின் தகவல்களை திருடவும் செய்கிறது. இந்நிலையில், கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 25 ஆப்களில் ஏதேனும் ஒன்றை யாராவது டவுன்லோடு செய்து பயன்படுத்தி வந்தால் அதனை உடனடியாக அன் - இன்ஸ்டால் செய்யுமாறு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான எவினா மற்றும் கூகுள் பரிந்துரை செய்துள்ளது. இந்த ஆப்களை பயன்படுத்தும் நபர்களின் ஃபேஸ்புக் பாஸ்வேர்டு மற்றும் இதர தகவல்கள் திருடப்படுவதாக கண்டறியப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Super Wallpapers Flashlight, Padenatef, Wallpaper Level, Contour level wallpaper, Iplayer & iwallpaper, Video maker, Colour Wallpapers, Pedometer, Powerful Flashlight, Super Bright Flashlight, Super Flashlight, Solitaire game, Accurate scanning of QR, Classic card game, Junk file cleaning, Synthetic Z, File Manager, Screenshot capture, Composite Z, Daily Horoscope Wallpapers, Wuxia Reader, Plus Weather, Anime Live Wallpaper, iHealth step counter, Com type fiction

மேற்கூறப்பட்டுள்ள 25 ஆப்களும் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அனைத்து ஆப்களும் சுமார் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை டவுன்லோடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 25 apps dangerous for facebook account uninstall warns google ban | India News.