‘டிக்டாக் திரைப்பட விழா’.. ‘முதல் பரிசு ரூ.33,333. 2 -வது பரிசு ரூ.22,222’.. ஆனா இது இவங்களுக்கு மட்டும்தான்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Aug 12, 2019 03:46 PM

புனேவில் டிக்டாக் திரைப்பட விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TikTok film festival is happening in Pune

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை கவர்ந்த ஒரு செயலி டிக்டாக். இதில் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை வயது பேதமின்றி நடனம் ஆடி, பாட்டு பாடி அந்த வீடியோக்களை டிக்டாக் -ல் பதிவேற்றி வருகின்றனர். ஆர்வமிகுதியில் பலர் அபாயகரமான இடங்களில் டிக்டாக் வீடியோ எடுத்து உயிரிழந்த சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் புனேவில் பிரகாஷ் யாதவ் என்பவர்  ‘டிக்டாக் திரைப்பட விழா’ என ஒன்றை நடத்த இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் சிறந்த காமெடி, குணசித்திர நடிப்பு, சமூக விழிப்புணர்வு, சுற்றுச்சூழல், சிறந்த ஜோடி உள்ளிட்ட 12 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கான வீடியோக்களை வரும் 20 -க்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.33,333 மற்றும் இரண்டாவது பரிசு ரூ.22,222 மற்றும் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதல் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த போட்டியில் இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் உள்ள வீடியோக்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என டுவிஸ்ட் வைத்துள்ளனர்.

Tags : #TIKTOK #FESTIVAL #PUNE