‘லாரி ஓட்டுநருக்கு நடந்த பயங்கரம்..’ குடித்துவிட்டு வந்ததாக.. ‘உரிமையாளர்கள் செய்த பதைபதைக்க வைக்கும் காரியம்..'
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Behindwoods News Bureau | Jul 29, 2019 06:37 PM
ஓட்டுநர் ஒருவரை லாரி உரிமையாளர்கள் கட்டித் தொங்கவிட்டு தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான விக்கி என்பவர் தனியார் லாரி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். விக்கி வேலை நேரத்திலும் மதுபோதையில் இருந்ததால், பணியாற்றும் நிறுவனத்திற்கு அவரால் அவப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த லாரி உரிமையாளர்கள் விக்கியை அலுவலகத்துக்குள் கட்டித் தொங்கவிட்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும் அதில் ஒருவர் கம்பி ஒன்றை அவரின் அந்தரங்க உறுப்புக்குள் நுழைத்தும் சித்திரவதை செய்துள்ளார். அரைநிர்வாணக் கோலத்தில் அவர் தாக்கப்படும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
வீடியோ மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ள போலீஸார் இதுதொடர்பாக லாரி உரிமையாளர்கள் அகில் போகன்கர் மற்றும் அமித் தாக்ரே ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
