‘டேய் என் பையை கொடுடா...’ ‘நான் விடவே இல்ல, அவங்கள தொரத்திட்டு நானும் ஓடுனேன்...’ தைரியத்துடன் செயல்பட்ட பாட்டிக்கு பாராட்டு மழை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 10, 2020 03:52 PM

வழிப்பறித் கொள்ளையர்களிடம் இருந்து தனது பணத்தைப் விடாமல் துரத்தி சென்று மீட்ட விழுப்புரம் பாட்டியை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.

Grandmother struggling to recover money from thieves

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்தவர் பெண்ணரசி. வட்டார விரிவாக்கக் கல்வியாளராக இருந்து ஓய்வு பெற்றவர் பெண்ணரசி தன்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து படம் எடுக்க விழுப்புரம் நேருஜி வீதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்குச் சென்றுள்ளார்.

பெண்ணரசி 32000 ரூபாய் எடுத்துகொண்டு மதியம் 1 மணியளவில் வங்கியிலிருந்து வெளியே வந்துள்ளார். வீடு திரும்ப பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளார். வங்கியின் முன் நின்றுக் கொண்டிருந்த இரு மர்ம நபர்கள் பெண்ணரசிக்கு தெரியாமல் அவரை பைக்கில் பின் தொடர்ந்து வந்துள்ளார்.

பேருந்து வர தாமதமாகவே தனது மூட்டுவலிக்கு தேவையான பொருட்களை வாங்க அருகிலிருக்கும் கடைக்கு சென்றுள்ளார் பெண்ணரசி. அவரை தொடந்து சென்ற இரண்டு மர்மநபர்களில் பின்னாடி இருந்த ஒருவன் பெண்ணரசியின் கையிலிருந்து பையைப் பிடுங்க முயற்சி செய்துள்ளார்.

உடனே சுதாரித்துக் கொண்ட பெண்ணரசி பணப் பையை இறுக்கி பிடித்துக்கொண்டு “பையை விடுடா… விடுடா..” என கத்திக் கொண்டே அவர்களின் பின்னாலேயே ஓடியுள்ளார். பெண்ணரசியின் சத்தத்தை கேட்டு அருகில் இருக்கும் பொது மக்கள் அனைவரும் அவர்களை நோக்கி ஓட வரவே கொள்ளை அடிக்க முயற்சித்த இரண்டு மர்ம நபர்கள் பையை உதறி விட்டு சென்றுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விழுப்புரம் தாலுகா காவல்துறையினர், பெண்ணரசி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் மூதாட்டி பெண்ணரசியை நேரில் அழைத்து அவரது வீரத்தைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இது பற்றி அவர் கூறுகையில் “அவர்கள் ரெண்டுபேரும் வந்து பணப்பையை என்னிடம் இருந்து பிடுங்க முயற்சி செஞ்சாங்க. உழைச்சு சம்பாதிச்ச பணத்தை எப்படி விட முடியும்..? பையின் கைப்பிடி அவர்களிடம் மாட்டியது. ஆனாலும் என் பலம் முழுக்க வைத்து பையை இறுக்கமா வைத்தேன். ரோட்டோட இந்தப் பக்கம் இருந்து அந்தப் பக்கம் வரைக்கும் அவர்களிடம் போராடிக்கொண்டே ஓடினேன். அதுக்கப்புறம்தான் பையை விட்டுட்டு தப்பித்து ஓடினார்கள்” என்றார்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வங்கிக்குப் பணம் எடுக்கச் செல்லும் முதியவர்கள் கண்டிப்பாக உடன் யாரையாவது அழைத்துச் செல்ல வேண்டும். அதேபோல பணத்தை எடுத்துவிட்டு வங்கியின் வளாகத்திலும் வெளியேயும் பணம் எண்ணுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், வங்கியில் இருந்து வெளியே வரும் நேரத்தில் யாராவது சந்தேகப்படும்படி தங்களை கவனிக்கிறார்களா என்பதைக் கவனித்து, தேவைப்பட்டால் அருகிலிருக்கும் காவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். அதேபோல வங்கியில் பெரும் தொகையை எடுத்துக்கொண்டு கடைகளுக்கோ அல்லது டாஸ்மாக் போன்ற இடங்களுக்கோ செல்வதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags : #GRANDMOTHER