மீண்டும் 'மாயமாகி ' போன கிம்... உண்மையிலேயே 'உயிரோட' தான் இருக்கிறாரா?... வலுவான 'ஆதாரங்களை' முன்வைக்கும் வல்லுநர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | May 19, 2020 07:12 PM

கொரோனா கலவரங்களுக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் காணாமல் போய் இருக்கிறார்.

Kim Jong Un Disappeared From View, But North Korea’s Problems Never Le

கடந்த மாதம் கொரோனா கவலையில் ஆழ்ந்திருந்த உலக நாடுகளை வடகொரியா அதிபர் கிம் காணாமல் போய் விட்டார் என்ற தகவல் பரபரப்படைய செய்தது. வழக்கம்போல அமெரிக்கர், சீனா நாடுகள் இதிலும் போட்டிபோட்டு கிம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டின. அவர் இறந்து விட்டதாக வெளியான தகவல்கள் கொரோனாவை காட்டிலும் அதிர்வுகளை ஏற்படுத்தின. தொடர்ந்து அனைவரது முன்பும் தோன்றி தன்மீதான விமர்சனங்களுக்கு கிம் முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால் அது கிம் கிடையாது என்றும் அவரது டூப் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து இருந்தனர். இதற்கிடையில் கொரோனாவும் புயல் வேகத்தில் பரவ, கிம் குறித்த கவலைகளை கைவிட்டு அமெரிக்கா-சீனா இரு நாடுகளும் தங்களது சொந்த விவகாரங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தன. இந்த நிலையில் மீண்டும் கிம் காணாமல் போய் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மே 1-ம் தேதி வந்த கிம் ஜோங் உன் வெளியே எங்கும் காணப்படவில்லை. மூன்று வாரமாக அவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை.

மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக வட கொரியாவின்  கிம் இல் சங் நினைவு சதுக்கத்தில் இருந்து கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் இல் சங் மற்றும் அப்பா கிம் ஜாங் இல் ஆகியோரின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. வடகொரியாவை பொறுத்தவரை அரசியல் தலைவர்களுக்கு மரணத்திற்கு பின்தான் சிலைகள், புகைப்படங்கள் வைக்கப்படும். இதனால் அங்கு கிம் ஜாங்  உன் புகைப்படத்தை வைக்க திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக வெளியாகும் செய்திகள் உலக அரங்கில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.

உச்சகட்டமாக அங்குள்ள ரசான் என்னும் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டு உள்ளது. ஒன்று அந்நகரத்தில் கொரோனா பாதிப்பு பெரியளவில் ஏற்பட்டு இருக்க வேண்டும். இல்லையெனில் ஏதாவது ஏதாவது மிகப்பெரிய நிகழ்ச்சி அங்கு நடைபெறலாம் என அந்நகர மக்கள் கவலை தெரிவித்து இருக்கின்றனர். இதனால் வரும் நாட்களில் அமெரிக்காவும், சீனாவும் களத்தில் குதித்து தங்களின் கடமைகளை மீண்டும் ஆற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.