VIDEO: 'அய்யோ... அங்க என்னமோ ஓடுது பாருங்க!'.. சத்தம் போட்ட சபாநாயகர்!.. நாடாளுமன்றத்தில் அலறியடித்து ஓடிய எம்.பி.க்கள்!.. வைரல்!
முகப்பு > செய்திகள் > உலகம்நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதம் நடந்துகொண்டிருந்த போது, எம்.பி.க்களை அங்கிருந்து அலறியடித்து ஓட வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் அந்தலுசியன் நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, எம்.பி.க்கள் சுசானா டயஸை செனட்டராக நியமிக்க கோரும் ஒரு முக்கியமான பிரச்சினையில் வாக்களிக்க தயாராகிக் கொண்டு இருந்தனர்.
அந்த சமயத்தில், எலி ஒன்று எம்.பி.க்கள் காலில் ஏறி அங்கும் இங்கும் ஓடியது. இதனைக் கண்ட பெண் எம்.பி.க்கள் கதறியபடி ஓடினர். சிலர் கத்தி கூச்சலிட்டவாறு வெளியே ஓடினர். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, ஒரு வழியாக எலி வெளியேற்றப்பட்டது. அதன் பிறகு, நாடாளுமன்ற நடவடிக்கைகள் இயல்பாகவே மீண்டும் தொடங்கின. எம்.பி.க்கள் மீண்டும் கூடி, அந்தலுசியன் தன்னியக்க சமூகத்தின் செனட்டராக பெர்னாண்டோ லோபஸ் கிலுக்கு பதிலாக சுசானா டயஸை தேர்ந்து எடுத்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் எலி புகுந்ததால் எம்.பி.க்கள் அலறிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

மற்ற செய்திகள்
