சென்னை அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் ‘தீ’ விபத்து.. ‘ராட்சத’ இயந்திரம் மூலம் மீட்புப்பணி தீவிரம்.. பல கி.மீ தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பல கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
![Fire accident near Anna salai in Chennai Fire accident near Anna salai in Chennai](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/fire-accident-near-anna-salai-in-chennai.jpg)
சென்னை அண்ணாசாலை, சாந்தி தியேட்டர் அருகேயுள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்புக்குழுவினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கட்டிடத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் ராட்சத இயந்திரங்கள் மூலம் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் 3 மாடியில் உள்ள கணினி விற்பனை நிறுவனத்தில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தினால் பாரிமுனையில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)