40 சாட்டிலைட்டும் காலி.. விண்வெளியில் நடந்த சம்பவம்.. 750 கோடி நஷ்டத்தில் எலான் மஸ்க்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட 40 செயற்கைக் கோள்கள் விண்வெளியில் வீசிய மின்காந்தப் புயலால் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்கிற்கு இதனால் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 753 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ்
அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் விண்வெளி சுற்றுலா, இணைய சேவை உள்ளிட்ட வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் உலகளவில் இணைய வசதியை ஏற்படுத்த, 2,000க்கும் மேற்பட்ட, 'ஸ்டார்லிங்க்' செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த வாரம் 49 செயற்கை கோள்களை விண்ணிற்கு அனுப்பியது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இந்த செயற்கை கோள்களை பூமியில் இருந்து, 210 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்த முயன்றபோது, திடீரென பயங்கர வேகத்தில் மின்காந்தப் புயல் பூமியை தாக்கியது. இதன் காரணமாக 40 செயற்கை கோள்கள் எரிந்து சாம்பலாகி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
49 செயற்கை கோள்கள்
இணைய சேவையை மேம்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் துவங்கப்பட்ட 'ஸ்டார்லிங்க்' திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி, அமெரிக்காவின் கென்னடி ஸ்பேஸ் சென்டரில் இருந்து 49 செயற்கை கோள்களை ஃபால்கான் 9 ராக்கெட் மூலமாக விண்வெளிக்கு அனுப்பியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.
மின்காந்தப் புயல்
இந்நிலையில் பிப்ரவரி 4 ஆம் தேதி, விண்வெளியில் வீசிய மின் காந்தப் புயலில் எலான் மஸ்கின் 40 செயற்கை கோள்கள் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியிருக்கின்றன. கடந்த ஜனவரி 29 ஆம் தேதி சூரியனின் வெளிப்பகுதியில் தோன்றிய இந்த மின்காந்த புயலை ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். பிப்ரவரி 1 ஆம் தேதி, பூமியின் வளிமண்டலத்தை இப்புயல் நெருங்கும் போது அதன் வலிமை குறைந்துவிடும் என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர் . ஆனால், பிப்ரவரி 4 ஆம் தேதி வீசிய இப்புயலின் அதிக அடர்த்தி காரணமாக 40 செயற்கை கோள்கள் எரிந்து சாம்பல் ஆகியிருக்கின்றன.
இழப்பு
40 செயற்கை கோள்களின் உருவாக்கம், அதன் ஹார்டுவேர் மற்றும் அவற்றை விண்ணில் செலுத்த ஆன செலவுகள் என இந்த விபத்தினால் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு 00 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 753 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் பாத்து பாத்து செஞ்ச 40 செயற்கை கோள்களும் ஒரே புயலில் காலி ஆகியிருப்பது அவரை மிகுந்த கவலையில் ஆழத்தியுள்ளது. பாவம் மனுஷன்..
ஒரே மடக்கில் முழு பாட்டில் வோட்காவை காலி செய்த இளைஞர்.. அடுத்து நடந்ததுதான் செம்ம ஷாக்..!