Kadaisi Vivasayi Others

"WFH பார்த்து கிழிச்சது போதும்".. மிரட்டிய CEO-வுக்கு ஊழியர்கள் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்.. 1 மாசத்திலே இப்படியா?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Pandidurai T | Feb 11, 2022 03:54 PM

வீட்டில் இருந்து வேலை பார்க்க விருப்பம் கேட்ட ஊழியர்களிடம், CEO மோசமாக நடந்துகொண்டதால் ஊழியர்கள் அதிர்ச்சி வைத்தியம் தந்தனர்.

Employees who quit their jobs because the CEO insulted them

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில்,  பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதியளித்தது. அதனோடு, வொர்க் ஃப்ரம் ஹோம் (WFH) முறையில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யலாம் என்பதை தொற்றுநோய் நமக்கு உணர்த்தி இருக்கிறது. இருப்பினும் ஒரு சில நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி தராததால் தினமும் சிரமத்தோடு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், ஒரு கம்பெனியின் அளித்த பதிலால், ஊழியர்கள் அதிர்ச்சி வைத்தியம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உணவு டெலிவரி நிறுவனம்

Reddit என்னும் சமூகவலைதள பக்கத்தில் பெயர் சொல்ல விரும்பாத ஃபுட் டெலிவரி ஆப் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் இதுகுறித்த தகவல்களை ஷேர் செய்திருக்கிறார். அந்த ஊழியர் Reddit-ல் ஷேர் செய்தாவது, "உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் ஆப் ஒன்றில், ஆப் டெவலப்மெண்ட் பணியில் நானும் ஒரு டீம் லீடராக சிறிது காலம் பணியாற்றினேன். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தே பணியாற்றினோம். சக ஊழியர்கள் பலர் நிறுவனம் இருக்கும் இடத்திற்கும், வீட்டிற்கும் ரொம் தூரமாக இருந்தது. கொரோனாவும் முடிவுக்கு வராத நிலை ஏற்பட்டது. எங்கள் நிறுவனம் திடீர் அறிவிப்பை ஒன்று வெளியிட்டது.

Employees who quit their jobs because the CEO insulted them

WFH  தேவை இல்லை 

அதன்படி, சீனியர் டீம் ஊழியர்கள் அனைவரும்  முதலில் பகுதி நேரமாக அலுவலகத்திற்கு சென்றனர். பின்பு முழு நேரமாக அலுவலகத்தில் பணியாற்றும்படி வழிவகை செய்துவிட்டனர். நாங்கள் வேலைக்கு சேர்ந்தபோது, return to work policy உங்களுக்கேற்றவாறு நெகிழ்வாக இருக்கும் நிறுவனம் சார்பில் தெரிவித்தனர். ஆனால் நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து தினமும் வேலைக்கு வந்து செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. தொலைதூரத்தில் இருக்கும் பணியாளர்கள் திடீரென குடும்பத்தை மாற்ற முடியாமல் தவித்தனர்.

கடுமையாக பேசிய சிஇஓ

இதனிடையே அந்நிறுவனத்தின் சிஇஓ -வுடனான மீட்டிங்கில், சக ஊழியர்கள் கேள்வி எழுப்பினர். அதாவது "நாங்கள் தூரத்தில் இருக்கிறோம். எங்களால் திடீரென இடம் மாறமுடியாது ஆகையால் எங்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அனுமதி தாருங்கள்" என்று தெரிவித்தனர். ஆனால், இதனால் கடுப்பான CEO, "இங்கே பாருங்கள். ஊழியர்களை அலுவலகத்திற்கு வர வைப்பதை நாங்கள் சிறந்த முடிவு என நினைக்கிறோம். WFH பார்த்து கிழிச்சது போதும், நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்பினால், வேறு எங்காவது வேலைக்கு செல்லுங்கள்" என்று வெளிப்படையாக கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தோம்.

Employees who quit their jobs because the CEO insulted them

50% ஊதியம், குறைந்த வேலை

இதன் பிறகு எங்கள் டீம் நபர்களை நிறுவனம் வித்தியாசமான முறையில் நடத்தியது. இதுவரை இல்லாத வகையில் அவை இருந்தன. இதனால், சுதாரித்துகொண்ட சக ஊழியர்கள் பலரும் வேலையை ராஜினாமா செய்து, வேறு நிறுவனத்தில் சேர்ந்தனர். இதேபோன்று 1 மாதத்தில் 3 பேரை தவிர மற்ற எல்லோரும் பணியில் இருந்து விலகிவிட்டனர். அவர்கள் சென்று 6 மாதம் ஆகிவிட்டன. இதுவரை ஒருவர் இப்பணிக்கு ஆட்கள் அமர்த்தப்படவில்லை. எனக்கு குறைந்தளவு வேலை 50% ஊதியம் மட்டுமே கிடைத்தது" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #REDDIT #WFH #SHARE VIDEO #FOOD DELIVERY #IT WORKERS #COMPANY CEO #RESIGN JOB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Employees who quit their jobs because the CEO insulted them | India News.