எங்க ஹோட்டல்ல சிக்கன் பிரியாணி இலவசமா சாப்டணுமா...? ஜஸ்ட் 'இத' மட்டும் பண்ணினா போதும்...! - அடிச்சு தூள் கிளப்பும் ஹோட்டல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சிங்கப்பூரில் தொழில்புரியும் இரு தமிழர்கள் தமிழ் மொழியை வளர்க்கும் பொருட்டு, தங்கள் ஓட்டலில் விற்பனையும் செய்யும் தமிழ் நாளிதழை வாங்கினால் சிக்கன் பிரியாணி இலவசம் என தூள் கிளப்பி வருகின்றனர்.

உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி இருக்கும் தமிழர்கள் நம் தாய் மொழியை வளர்க்க தங்களால் முடிந்ததை செய்து வருகின்றனர். இதேபோல் தான் சிங்கப்பூரில் வசிக்கும் தென்காசி மற்றும் மதுரையைச் சேர்ந்த இரு தமிழர்கள் தமிழுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் அப்பர் வெல்டு சாலையில் 'தென்காசி சாரல்' என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர் தென்காசியை சேர்ந்த ஷேக், மதுரையை சேர்ந்த பாபா ஹுசைன். தமிழ் மீது கொண்ட அன்பால் இருவரும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்துள்ளனர். அதாவது சிங்கப்பூரின் பிரபல தமிழ் நாளிதழை தங்கள் கடையில் வந்து வாங்குவோருக்கு இலவசமாக நாட்டுக் கோழி பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்தும் உள்ளனர்.
இந்த சலுகையானது காலை 9 மணிக்கு தொடங்கி முதலில் வந்த 250 பேருக்கு மட்டும் அளிக்கப்பட்டது. மேலும் தினமும் காலை 6 மணியில் இருந்து அதற்கடுத்த இரண்டு மணி நேரத்திற்கு ஊழியர்களுக்காக மலிவு விலையில் உணவு விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
'தென்காசி சாரல்' ஓட்டலுக்கு வரும் நபர்கள் பசியாறுவது மட்டுமல்லாமல் தமிழையும் சுவைத்து செல்கின்றனர்.

மற்ற செய்திகள்
