"உங்களுக்கு தெரியாதது ஏதாவது இருக்கு?!!"... 'CSK மேட்சில் தினேஷ் கார்த்திக் செய்த வைரல் சம்பவம்!!!'... 'அம்பயர் REACTION தான் ஹைலைட்டே!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகளின் போது மைதானத்தில் தமிழில் பேசி வைரலாகும் தினேஷ் கார்த்திக்கின் நேற்றைய வீடியோ ஒன்றும் வைரலாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் முழுக்கவே தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிவருவது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஸ்டம்பிற்கு பின் நின்று கொண்டு தினேஷ் கார்த்திக் தமிழில் பேசுவது பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில், முன்னதாக சக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியிடம் இவர் தமிழில் பேசியது சமூக வலைதளங்களில் ஹிட் அடித்தது.
முழுக்க முழுக்க தமிழில் பேசியே வருண் சக்கரவர்த்திக்கு அறிவுரை வழங்கி தோனியின் விக்கெட்டை தினேஷ் கார்த்திக் எடுத்தார். அதேபோல அவன் அடிக்க மாட்டான் என ஜாதவை தமிழில் அவர் கிண்டல் செய்ததும் பலரையும் கவர்ந்தது. அத்துடன் சமயத்தில் அவர் தமிழில் பேசிய கெட்ட வார்த்தை கூட கவனம் பெற்றது. இந்நிலையில்தான் மைதானத்தில் தமிழுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் தெலுங்கில் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்த போது ஒரு பந்து வைட் போல வந்தது. இதை தினேஷ் கார்த்திக்கால் அடிக்க முடியாதபோது, அவர் நடுவரிடம் தெலுங்கில் வைட் லேதா என வைட் இல்லையா எனும் அர்த்தத்தில் தெலுங்கில் கேட்டார். அதற்கு ஹைதராபாத்தை சேர்ந்த நடுவரான சம்சுதீனும் தெலுங்கில், "போகவில்லை, ஸ்டம்பிற்கு அருகில் சென்றது. கொஞ்சம் கூட வைட் லைன் அருகே செல்லவில்லை" என சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.
இப்படி திடீரென தெலுங்கில் பேசிய தினேஷ் கார்த்திக் இதற்கு முன்பே மைதானத்தில் மலையாளத்திலும், கன்னடாவிலும், இந்தியிலும், பஞ்சாபியிலும் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றைய வீடியோ வைரலாகப் பரவ, உங்களுக்கு தெரியாத மொழிதான் ஏதாவது இருக்கிறதா என ரசிகர்கள் பலரும் தினேஷ் கார்த்திக்கிடம் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.
Enti Dinesh Karthik ki telugu telsa🧐
And umpire belongs to hyderabad....
His name Chettithody Shamshuddin.#CSKvKKR https://t.co/7PS2fZ2PvY
— Chinna 🇮🇳 (@chinna_943) October 29, 2020