தமிழக முதல்வர் முதல் உலகத்தமிழ் அறிஞர்கள் வரை .. சோகத்தில் ஆழ்த்திய மறைவு! கொரோனாவால் மறைந்த இந்த துப்யான்ஸ்கி என்பவர் யார்?!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்குத் தொண்டாற்றிய அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா காரணமாக உயிரிழந்தார்.

1941-ஆம் ஆண்டு ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் பிறந்த அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி. 1970-ஆம் மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்ற இவர், சமஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் புலமை பெற்றிருந்தார்.
சோவியத் யூனியனில் தமிழ்மொழி சார்ந்த பதிப்புகள் குறைந்துபோது சொந்த முயற்சியினாலும், ஆய்வுப் பார்வையினாலும் தமிழ் வளர்க்கும் பணியைத் தொடர்ந்தார் துப்யான்ஸ்கி. 10 பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுத்தார். அரை நூற்றாண்டு காலமாகத் துப்யான்ஸ்கி தமிழ்
கற்பித்து வந்தார். 2000-ல் 'ரிச்சுவல் அண்டு மித்தாலஜிக்கல் சோர்ஸஸ் ஆஃப் தி ஏர்லி தமிழ் பொயட்ரி' என்ற புத்தகத்தை வெளியிட்டவர், சங்க இலக்கியத்தின் தொன்மங்கள், சடங்குகள் குறித்து அந்த புத்தகத்தில் எழுதினார்.
தனது தொல்காப்பியம் குறித்த ஆய்வுக்கட்டுரையை 2010-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த செம்மொழி ஆய்வு மாநாட்டில் பங்கேற்ற துப்யான்ஸ்கி சமர்ப்பித்தார். இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, தனது 79-வது வயதில் மாஸ்கோவில் காலமானார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழ் அறிஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
