என் வாழ்க்கையோட மோசமான '90' நொடி அது... என்னையே நான் வெறுத்துட்டேன்... 'டிரம்ப்' குறித்து ஆபாச நடிகை சொன்ன 'பகீர்' கருத்து!!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றுள்ள நிலையில், முன்னாள் அதிபர் டிரம்ப் குறித்து ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் (Stormy Daniels) அதிர்ச்சி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 2006 ஆம் ஆண்டு டிரம்ப் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், 2018 ஆம் ஆண்டில் தெரிவித்து பரபரப்பு குற்றம் ஒன்றை டிரம்ப் மீது சாட்டியிருந்தார். இதனை டிரம்ப் தரப்பினர் மறுத்த நிலையில், இதுகுறித்த தகவலை 2016 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தல் நடைபெற்ற போது, வெளியே தெரிவிக்காமல் இருக்க, தனக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் டாலரை டிரம்பின் வக்கீல் மைக்கேல் கோஹன் தந்ததாகவும் ஸ்டார்மி கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்டார்மியை போலீசார் கைது செய்தனர். தன் மீது தவறான குற்றத்தை சுமத்தி கைது செய்யப்பட்டதாக தனது டிவீட்டில் குறிப்பிட்ட ஸ்டார்மி, அரசியல் வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள வேண்டி தன்னை கைது செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு டிரம்ப் குறித்து மீண்டும் ஸ்டார்மி டேனியல்ஸ் பேசியுள்ளார். டிரம்ப்பின் வக்கீலாக இருந்த மைக்கேல் கோஹன் என்பவருடன், ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் இன்டர்வியூ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, '2006 ஆம் ஆண்டில் டிரம்புடன் உடலுறவு வைத்துக் கொண்ட 90 நொடிகள், எனது வாழ்நாளில் மிகவும் மோசமான தருணமாகும். அது மட்டுமில்லாமல் அதை நினைத்து, என் மீதே எனக்கு வெறுப்பு உருவாகியது' என தெரிவித்துள்ளார்.
மேலும், டிரம்புடன் உடலுறவு மேற்கொள்ளப்பட்ட போது அவர் எப்படி இருந்தார் என்பது பற்றியும் அந்த நிகழ்ச்சியில் ஸ்டார்மி டேனியல்ஸ் விவரித்துள்ளார். அதன் பிறகு, பேசிய வக்கீல் மைக்கேல் கோஹன், 2016 ஆம் ஆண்டில் தன்னால் ஏற்பட்ட மன வேதனைக்காகவும், ஸ்டார்மியிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
