வேற வழி இல்ல...! நம்ம ஊரு 'அந்த டிஷ்' அறிமுகம் பண்ணிட வேண்டியது தான்...! 'அமெரிக்க கொரோனா நோயாளிகளுக்காக...' - தமிழக சமையல் கலைஞரின் அசத்தல் காரியம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா கொரோனா பாதிக்கப்பட்ட மக்களின் முக்கிய மருந்தாக தமிழ்நாட்டு ரசம் மாறியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே வேற்றுநாட்டு நாகரிகங்கள், உணவு பழக்கவழக்கங்கள் இந்தியாவில் புகழடைவது இயல்பு. ஆனால் இப்போது தமிழகத்தின் பாரம்பரிய மிளகு ரசம் தற்போது அமெரிக்காவின் முக்கிய நகர மருத்துவமனைகளில் புகழ்பெற்ற உணவாக மாறியுள்ளது. இதற்கு காரணம் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி என்ற பகுதியைச் சேர்ந்த 35 வயதான சமையல் கலைஞர் அருண் ராஜதுரை.
அமெரிக்காவில் அதிகப்படியான கொரோனா பரவலால் பொதுமுடக்கம் அமல்படுத்தத்தப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் சமையல் கலைஞர் அருண் ராஜதுரைக்கு ஒரு எண்ணம் தோன்றி நம் தமிழ்நாட்டின் ரசம் நியாபகம் வந்துள்ளது. மேலும் ரசத்தில் சேர்க்கப்படும் மஞ்சள், பூண்டு, மிளகு என அனைத்து பொருள்களுமே நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக் கூடியது. எனவே கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க ரசம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணியுள்ளார்.
அதன் படி அமெரிக்காவில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மூன்று மருத்துவமனைகளுக்கு உணவளித்து வந்தார். அந்த உணவுடன் சேர்த்து இலவசமாக இந்த ரசத்தையும் கட்டணம் இல்லாமல் அனுப்பியுள்ளார்
அதன்பின் ரசத்தின் ருசியும், அதன் மருத்துவ குணமும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு ரசத்தின் தேவை அதிகரித்தது. இதனால் அருண் பணியாற்றிய அஞ்சப்பர் பிரின்ஸ்டன் ஹோட்டலின் உணவுப் பட்டியலில் தவிர்க்கவே முடியாத உணவாக ரசம் மாறியது.
அதுமட்டுமில்லாமல் அருண் அவர்களின் ரசத்தின் புகழ் பல நகரங்களுக்கும் பரவியதால், நியூ யார்க், நியூ ஜெர்ஸி மற்றும் கனடாவில் உள்ள கிளை உணவகங்களிலும் ரசம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 500 முதல் 600 கோப்பை ரசம் விற்பனையாகிவருவதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
