"'கிறிஸ்துமஸ்' கொண்டாட பொருள் 'ஆர்டர்' பண்ணா... என்னங்க உள்ள 'அனுப்பி' வெச்சுருக்கீங்க??..." பார்சலை திறந்ததும் ஷாக்கான 'பெண்'... 'அதிர்ச்சி' சம்பவம்!!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் இல்லினோயிஸ் (Illinois) என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்ரியா எல்லிஸ். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது பாட்டியின் வீட்டிலுள்ள தோட்டத்தை அலங்கரிக்க வண்ணக் கொடிகளை அவர் ஆர்டர் செய்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் கொடியை ஆர்டர் செய்திருந்த நிலையில், அது தற்போது வீட்டிற்கு வந்தடைந்துள்ளது. வீட்டிற்கு வந்த பார்சலை ஆண்ட்ரியா திறந்து பார்த்த போது உள்ளே இருந்த பொருள் ஒன்றைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். காரணம், வண்ண கொடிகளுடன் வேறொரு பையும் அதில் இருந்துள்ளது. உயிருக்கு ஆபத்து (biohazard) என குறிப்பிட்டிருந்த அந்த மற்றொரு பைக்குள் ஒருவரின் கொரோனா சோதனைக்கான மாதிரி இருந்துள்ளது.
அச்சத்தில் உறைந்து போன ஆண்ட்ரியா, உடனடியாக காவல் நிலையத்திற்கும், சுகாதார துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த பையைப் பெற்றுக் கொண்ட உயர் அதிகாரி, ஒருவரின் கொரோனா பரிசோதனை மாதிரி எப்படி வீட்டிற்கு ஆர்டர் செய்துள்ள பார்சலில் வந்துள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அது மட்டுமில்லாமல், சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் பொருட்கள் ஆர்டர் செய்திருந்த பையில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவிருந்த மாதிரிகள் இருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
