பதவியேற்றார் ஜோ பைடன்...! 'விழாவில் பங்கேற்ற முன்னாள் அதிபர்கள்...' - துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்பு...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அமெரிக்கா அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்து இன்று (20-01-2021) வெளியேறினார்.
இந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்களான பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், மைக் பென்ஸ் உள்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையில் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றார்.
அதனைதொடர்ந்து ஜோ பைடன், அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவின் முன்னாள் அதிபர் டிரம்ப் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார். 1869-ஆம் ஆண்டிற்கு பின், தற்பொழுது தான் முதல் முறையாக புதிய அதிபர் பதவியேற்பு முந்தைய அதிபர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.