‘கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி???’... ‘அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல்’... ‘அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப்’... !!!
முகப்பு > செய்திகள் > உலகம்அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் சீனாவின் வூகான் நகரில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, 2020-ம் ஆண்டு, உலகம் முழுவதையும் முடக்கிப்போட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணிகளில் பல்வேறு நாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு, இந்தியாவின் பாரத் பயோடெக் உள்ளிட்ட நிறுவனங்களின் தடுப்பூசிகள் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஆகியவை இறுதிக்கட்ட சோதனைகளில் உள்ளன.
அதிலும், அமெரிக்க நிறுவனமான மாடர்னா, கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடித்த தடுப்பு மருந்து 95 சதவீத அளவுக்கு பலனளிப்பதாக கூறியிருந்தது.
இந்நிலையில், அடுத்த வாரம் முதல் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்க உள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாளையொட்டி ராணுவ வீரர்களுடன் காணொளிக்காட்சி மூலமாக உரையாற்றினார் ட்ரம்ப்.
அப்போது, அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்க இருப்பதாகவும், முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், இந்த தடுப்பூசி விரைவாகக் கிடைப்பதற்காக தன்னால் முடிந்த அளவு முயன்றதாகவும், எனவே இதற்கான பெயர் ஜோ பைடனுக்கு சென்றுவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
