"இது எப்படி இங்க வந்துச்சு".. அட்லாண்டிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்ட வினோத உயிரினம்.. கலர்ஃபுல்லா இருக்கே..!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக ஸ்பெயினில் வாழும் ஒரு சிறிய அரிய கடல் உயிரினம் முதன்முறையாக பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது ஆராய்ச்சியாளர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | "நான் ரத்தன் டாடா பேசுறேன்" ..இளம் தொழிலதிபரின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஒரு போன்கால்.. என்ன மனுஷன்யா..!
பிரிட்டனில் வனவிலங்கு அறக்கட்டளையின் தேசிய கடல் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கடல்சார் புகைப்படங்களை எடுத்துவருகிறார் தன்னார்வலரான ஆலன் முர்ரே. இவர் மக்கள் வசிக்காத பாறைத் தீவான சில்லி அருகே டைவ் செய்யும் போது விசித்திரமான கடல் உயிரினம் ஒன்றை பார்த்திருக்கிறார் பல்வேறு வண்ணங்களுடன் இருந்த அந்த உயிரினத்தை அவர் புகைப்படம் எடுத்திருக்கிறார். இதனை சில்லி கடல் ஆய்வு குழு தலைவரான மாட் ஸ்லாட்டர் -இடம் காட்டியிருக்கிறார் புகைப்பட நிபுணரான ஆலன்.
திகைத்துப்போன ஆராய்ச்சியாளர்
இந்த வினோத விலங்கின் பெயர் பாபாகினா அனடோனி (Babakina anadoni) என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது வழக்கமாக ஸ்பெயின் தெற்கு கடல் பகுதியில் மட்டுமே வசித்து வந்ததாக நம்பப்பட்டு வந்த நிலையில் முதன்முறையாக பிரிட்டன் தீவு ஒன்றில் இந்த விலங்கினம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து பேசிய மாட் ஸ்லாட்டர்,"இந்த வண்ணமயமான விலங்கை ஆலன் பார்த்ததை அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். இது இங்கிலாந்தில் இதுவரை கண்டறியப்படவில்லை என்று நாங்கள் நம்புகிறோம். இது நான் பார்த்த மிக அழகான கடல் உயிரினங்களில் ஒன்றாகும். இது சுண்டு விரலின் பாதி அளவை விட குறைவாக உள்ளது. ஆலன் அதைக் கண்டுபிடித்தது ஆச்சரியமாக இருக்கிறது. எங்கள் கடல் சூழலைப் பற்றி எங்களுக்குத் தெரியாத பல தகவல்கள் இருக்கிறது என்பதையே இந்த சம்பவம் எங்களுக்கு உணர்த்துகிறது" என்றார்.
அறியப்படாத விஷயம்
இந்நிலையில் இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே இதுகுறித்து பேசிய சில்லி வனவிலங்கு அறக்கட்டளையின் தகவல் தொடர்பு மேலாளர் லூசி மெக்ராபர்ட்," இந்த தீவுக்கு புதிய வகை உயிரினங்கள் வருகை தருவது எங்களுக்கு ஆச்சர்யம் அளிப்பதில்லை. ஏனென்றால் அரியவகை வண்ணமிகு நத்தைகள் முதல் ஹம்பக் திமிங்கிலங்கள் வரை இந்த பகுதிக்கு வருவதை நாங்கள் முன்னரே பார்த்திருக்கிறோம். இந்த கடல் பரப்பு குறித்து இன்னும் அறியப்படாத பல விஷயங்கள் உள்ளன" என்றார்.
இந்த இனம் அயோலிட் நுடிபிராஞ்ச் குடும்பத்தைச் சேர்ந்தது. இவற்றின் உடலில் உள்ள பல்வேறு வகையான வண்ணங்கள் இதனை பிற கடல்வாழ் உயிரினங்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுகின்றன. இதனிடையே ஆலன் எடுத்த புகைப்படம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | "தூங்குனா போதும்.. சம்பளம் தர்றோம்".. திகைக்க வச்ச நிறுவனத்தின் Job ஆஃபர்.. படையெடுக்கும் நெட்டிசன்கள்..!