PACIFIC பெருங்கடலில் நிகழ்ந்த ஆச்சரியம்.. "2900 அடிக்கு கீழ ஆய்வு செஞ்சதுல.." போட்டோ'வ பாத்து மிரண்டு போன நெட்டிசன்ஸ்
முகப்பு > செய்திகள் > உலகம்கடல் கரை அருகே நடந்து செல்வது என்றாலே, பலரது மனதிலும் ஒரு விதமான புத்துணர்ச்சி உருவாகும்.
கடல் அலையின் சத்தத்திற்கு மத்தியில், அதில் கால் நனைத்த படி செல்லும் போது, எப்போதும் ஒரு விதமான ஆச்சரியம், கடந்து செல்பவர்கள் மனதில் நிறைந்திருக்கும்.
அதே வேளையில், கடல் நீருக்கு அடியில் ஏராளமான அபூர்வங்களும், நம்மை வியப்பில் ஆழ்த்தும் விஷயங்களும் கூட ஒளிந்து கிடக்கின்றது.
அரிய வகை உயிரினம்
அடிக்கடி கடல் நீரில் இருந்து அரிய வகை உயிரினம், மீனவர்கள் அல்லது ஆய்வாளர்கள் மத்தியில் அறியப்பட்டு, அப்படி சிக்கும் உயிரினம் தொடர்பான விவரங்கள் கூட, பலரையும் பிரம்மிப்பில் உறைந்து போக செய்யும். அந்த வகையில், தற்போது சிக்கியுள்ள கடல் விலங்கு தொடர்பான செய்தி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
பாக்கவே வித்தியாசமா இருக்கே..
Sea Pen என்ற உயிரினம் கீழ், 14 குடும்பங்களும், அதன் கீழ் சுமார் 450 Species வகைகளும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவற்றுள் தற்போது 250 Species வரை இருப்பதாகவும், அதில் ஒரு அரிய Sea Pen-ஐ தான், ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பசிபிக் பெருங்கடலில், ஜான்ஸ்டன் அட்டோலுக்கு வடக்கே, இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்படாத கடல் பகுதியின் சுமார் 2994 மீட்டர் தூரத்தில் ஆய்வு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
அப்போது தான், Solumbellula என்னும் இந்த கடல் பென் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பார்ப்பதற்கே சற்று வினோதமாக இருக்கும் இந்த உயிரினத்திற்கு, 2 மீட்டர் நீளமுள்ள தண்டில் இருந்து சுமார் 40 செ. மீ மேல் நீளும் பின்னேட் கூடாரங்கள் கொண்ட ஒரு பெரிய உணவருந்தும் பகுதி இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விசித்திர உயிரினமான கடல் பென்னின் புகைப்படம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த கடல் பென் என்னும் கடல் விலங்கு, ஒரு பக்கம் பார்ப்பதற்கு பூ போன்றும், மறுபக்கம் பார்ப்பதற்கு ஒரு பூச்சி போன்றும் இருக்கும் நிலையில், ஆராய்ச்சி நடக்காத கடல் பகுதியில், இப்படி ஒரு அரிய வகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பலரையும் மிரண்டு போகச் செய்துள்ளது.
Also Read | Kallakurichi: இறந்த மாணவியின் தாய் எழுப்பிய கேள்விகளும்.. பள்ளி நிர்வாகத்தின் விளக்கமும்.. முழு விபரம்..!