“ஆரம்பத்துல கேமரால ஏதோ கோளாறுன்னு நெனச்சோம், ஆனா..!” உறைபனிக்கு அடியில் அதிசயம்.. ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அண்டார்டிகாவின் உறைபனி பாளங்களுக்குக் கீழே இதுவரை அறியாத ஒரு உலகம் உள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | நாய் குரைத்த சத்தத்தால் ஏற்பட்ட பிரச்சனை.. டாட்டூ கலைஞருக்கு நேர்ந்த சோகம்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!
நியூசிலாந்தை சேர்ந்த ஆய்வு குழுவினர் காலநிலை மாற்றம் குறித்து அண்டார்டிகாவுக்கு சென்றிருந்தனர். இதில் வெலிங்டன், ஆக்லாந்து, ஒடாகோ பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய ஆய்வு நிறுவனங்கள் பங்கு பெற்றன. அப்போது உறைபனிக்கு கீழே 500 மீட்டர் துளையிட்டு ஆய்வு செய்தபோது அங்கு உயிரினங்களின் வாழ்விடம் அமைந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த ஆய்வாளர் கிரேக் ஸ்டீவன்ஸ், ‘ஆரம்பத்தில் கேமராவில் ஏதோ கோளாறு என்று நினைத்தோம். பிறகு கூர்மையாக நோக்கும் போது தான் 5 மில்லி மீட்டர் அளவில் கணுக்காலிகள் போலான உயிரிகள் அலைவதைப் பார்க்க முடிந்தது’ என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கூறிய மற்றொரு ஆய்வாளரான ஹூ ஹோர்கன், ‘முதன்முறையாக இந்த நதியைப் பார்த்ததும், உணர்ந்ததும் புதிய ரகசிய உலகத்தில் நுழைந்தது போல இருக்கிறது’ என கூறினார். உறைபனிக்கு கீழே நன்னீர் ஏரிகள் இருப்பதை முன்பே ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதுகுறித்து நேரடியாக ஆய்வு செய்தது மிகக் குறைவு.
முதன்முறையாக நதி துவாரம் இருக்கும் இடத்தை சாட்டிலைட் மேப்பில் கண்டறியப்பட்டது. பின்னர் அங்கு வாழும் உயிரிகள், அந்த நீரின் தன்மை குறித்து மேலும் ஆய்வு செய்வதற்கான கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. தாவரங்களும், விலங்குகளும் பனி மற்றும் வெளிச்சம் இல்லாத சூழலில் வாழ்வது குறித்து ஆய்வுகள் செய்யப்பட உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
