'கொரோனா நோயாளிகளில்...' '4ல்' ஒருவருக்கு இந்த 'பாதிப்பு' இருக்கிறது... 'ஆய்வில் அதிர்ச்சித் தகவல்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | May 20, 2020 09:50 AM

கொரோனா நோயாளிகள், 4ல் ஒருவருக்கு மனநல பாதிப்பு இருப்பதாக லண்டன் பல்கலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

One in four coronary patients has mental illness

இது குறித்து, 'தி லான்செட் சைக்கியாட்ரி' இதழில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கொரோனா நோயாளிகளில், நான்கில் ஒருவர், மனப் பிரமை பிரச்னைக்கு ஆளாகிறார். இது, வழக்கமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்படுவது தான். எனினும், இந்த பிரச்னை, ஒருவரின் உயிரைப் பறிக்க அல்லது குணமடைவதை தாமதிக்க காரணமாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

கொரோனா சிகிச்சைக்குப் பின் குணமானோருக்கு, மன அழுத்தம், மன உளைச்சல், பதற்றம், மனப் பிரமை, குழப்பம், ஞாபக மறதி போன்ற பிரச்னைகளை இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா நோயாளிகள் தனிமையில் வைக்கப்படுகின்றனர். அதுதான், அவர்களின் மனநல பாதிப்பிற்கு காரணமாக அமைகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் அவர்கள், 'வீடியோ' மூலம் தங்கள் சுற்றத்தாரை காணவும், பேசவும் வசதி செய்தால், மன நலம் மேம்படும் சாத்தியக் கூறு உள்ளது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.