'இந்தியாவுல பரவிட்டு இருக்க கொரோனாவ...' நாங்க 'அந்த லிஸ்ட்'ல வச்சுருக்கோம்...! - உலக சுகாதர நிறுவனம் அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தியாவில் பரவும் மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் கவலை அளிக்கும் விதமாக இருப்பதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவலால் மோசமான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. கடந்த வருடத்தை விட பரவும் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது எனலாம்.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் முதன்முதலில் கடந்த அக்டோபர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸை, உலக சுகாதர நிறுவனம் கவலையளிக்கும் வைரஸ் பட்டியலில் இணைப்பதாக அறிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, 'இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு மாற்றமடைந்த கொ\ரோனா, வேகமாக பரவுவதாக தெரிகிறது.
எனவே இதனை நாங்கள், உலக அளவில் கவலையளிக்கும் கொரோனா வைரஸாக வகைப்படுத்துகிறோம். மேலும், முதற்கட்ட ஆய்வுகளில், இந்த வகை கொரோனா மீது நோய் எதிர்ப்புசக்தி குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் மட்டுமல்லாமல் பிரேசில், பிரிட்டன், தென் ஆப்பிரிக்க வகை கொரோனா வைரஸ்களையும் கவலையளிக்கும் கொரோனா வைரஸ் பட்டியலில் வைத்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

மற்ற செய்திகள்
