'மார்ச் 1' முதல் அடுத்த கட்ட 'தடுப்பூசி'... யாருக்கெல்லாம் வழங்கப்படும்??... 'தனியார்' மருத்துவமனைகளில் போட்டுக்கொள்ள... எவ்வளவு செலவு செய்யவேண்டும்??
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த கொடிய தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பல நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டும் வருகிறது. இந்தியாவில், முதற்கட்டமாக, கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி முதல் சுகாதார ஊழியர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த நிலையில், அதன் பிறகு முன்கள பணியாளர்கள் என சுமார் மூன்று கோடி பேருக்கு தடுப்பூசி கொடுக்கும் பணிகள் நடைபெற்றது.
இந்நிலையில், அடுத்த கட்டமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள், மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டமாக, 60 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. அதே போல, 45 வயதை கடந்தவர்களில், ஏதேனும் உடல்நிலை பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசு மையங்களில் மட்டும், இதுவரை கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தனியார் மையங்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி வழங்கப்படாமல் இருந்தது.இந்நிலையில், மார்ச் 1 முதல் தனியார் மருத்துவமனை மற்றும் மையங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான கட்டணம் குறித்த விவரம் என்ன என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இதில், ஒரு டோஸ் தடுப்பூசிக்கு 250 ரூபாய் வரை வாங்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை அடுத்த 28 நாட்கள் கழித்து செலுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பின் குறிப்பு : இந்தியா முழுவதும் தனியார் மையங்களில், ஒரு டோஸ் தடுப்பூசிக்கு 250 ரூபாய் வரை வாங்கி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலம் விட்டு மாநிலத்திற்கு இந்த தொகை சிறிய அளவில் மாறுபட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
