VIDEO: இது 'எந்த ஹெலிகாப்டர்'னு தெரியுதா...? 'ஆமா நாங்க தான் தூக்கினோம்...' 'போட்டோ வெளியிட்ட தாலிபான்கள்...' - ஹெலிகாப்டர் குறித்து 'பரபரப்பு' தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான் படையினர் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு பரிசாக கொடுத்த ஹெலிகாப்டரை தாக்குதல் நடத்தி கைப்பற்றி அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் பின்வாங்கி வரும் சூழலில், தாலிபான் படையினர் சுமார் 70% பகுதியை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் குந்துஸ் விமானப் படைத்தளத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
இதில் கடந்த 2019-ஆம் ஆண்டு, இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு பரிசாக வழங்கிய எம்ஐ-35 ரக ஹெலிகாப்டரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் தாலிபான் படையினர். இந்தியா வழங்கிய எம்ஐ-24வி ஹெலிகாப்டர் முன் தாலிபான்கள் நின்றிருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்தான வீடியோவை பிரிட்டனைச் சேர்ந்த பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பாக ஆய்வு செய்துவரும் ஐஐஎஸ்எஸ் அமைப்பின் ஆய்வாளர் ஜோஸப் டெம்ப்சே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், இந்த ஹெலிகாப்டரில் சுழலும் பிளேடுகள் அகற்றப்பட்டுள்ளன. இவை ஒருவேளை தாலிபான்கள் ஹெலிகாப்டரை கைப்பற்றினால் அதை பயன்படுத்த முடியாதபடி பிளேடுகள் அகற்றப்பட்டு இருக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது.
Video reportingly shows #Taliban captured Kunduz airport with #Afghanistan Air Force Mi-35 Hind attack helicopter pic.twitter.com/u7jZJdR800
— Joseph Dempsey (@JosephHDempsey) August 11, 2021