'என்னது வீட்டுக்கே டீசல் வருமா'?... 'ஒரே ஒரு போன் கால் போதும்'... சென்னையில் அசத்தல் அறிமுகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 12, 2021 05:08 PM

சென்னையில் முதல் முறையாக வீட்டுக்கே டீசல் விநியோகிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

BPCL starts doorstep delivery of diesel in Chennai

சென்னை மாநகரில் " ஜெர்ரிகேன் " ( JerryCan " ) என்ற பெயரிலான ஒரு திட்டத்தின் மூலம் எரிபொருள் தேவைப்படுவோருக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே பெட்ரோல், டீசலை நேரடியாக வழங்கும் வசதியை BPCL தொடங்கியிருக்கிறது. நகர்வின்றி நிறுவப்பட்டுள்ள சாதனங்கள் மற்றும் டீசல் ஜெனரேட்டர்களை வைத்திருக்கின்ற சிறு நுகர்வோர்களுக்கு டீசலை வழங்குவதற்கான பாதுகாப்பான வழிமுறையாக , PESO 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஜெர்ரிகேன் ஒப்புதல் பெற்றிருக்கிறது.

BPCL starts doorstep delivery of diesel in Chennai

இதன்படி வாடிக்கையாளரின் தேவையைச் சார்ந்து , இரண்டு சக்கர வாகனங்கள் அல்லது பெரிய வாகனத்தின் வழியாக இந்த டெலிவரி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்ட அறிமுகத்தின் மூலம் வரும் நாட்களில் மாநகரின் அனைத்துப் பகுதிகளையும் மற்றும் புறநகர்ப் பகுதிகளையும் உள்ளடக்கி , 25 சில்லறை விற்பனையகங்களில் இதே வசதிகளுடன்  BPCL வழங்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர் சுற்று வட்டாரத்தில் 5 கிலோமீட்டருக்கு இந்த சேவையை 9500160063, 9444677246 என்கிற எண்ணைத் தொடர்பு கொண்டால் எரிபொருள் கிடைக்கும்.

Tags : #BPCL #DIESEL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. BPCL starts doorstep delivery of diesel in Chennai | Tamil Nadu News.