இப்படி பண்றது 'அவங்களுக்கு' தான் பயங்கர ரிஸ்க்...! 'பெரிய ஆபத்துல போய் முடியும்...' - 'கடும் எச்சரிக்கை' விடுத்த உலக சுகாதார நிறுவன இயக்குனர்...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் கடந்த 2019-ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை அடங்கியபாடில்லை. அதோடு, கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து மீண்டும் பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படும் நிலையில், இந்தியாவில் கொரோனா தன்னுடைய இரண்டாம் அலையின் மூலம் தன்னுடைய கோரவடிவை காட்டியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
அதுமட்டுமில்லாமல், தற்போது இந்தியாவில் அதிகளவில் காணப்படும் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை சற்று தணியத்தொடங்கியிருக்கும் நிலையில், மாநிலங்களில் கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவின் இந்த தளர்வுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, 'டெல்டா வகை கொரோனா பரவல் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு பெரும் ஆபத்தாக அமையும்' எனத் தெரிவித்துள்ளார்.
அதோடு, டெல்டா வகை கொரோனா இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவி, தற்போது சற்று தணியத்தொடங்கியுள்ள நிலையில் இங்கிலாந்தில் ஜூன் 21 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் கட்டுப்பாடுகளை தளர்த்துவதா? வேண்டாமா? என்பது குறித்தும் இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
