VIDEO: கிரவுண்ட்ல 'அவரு' இப்படி தான் இருந்தாரு...! 'டிவிட்டர்ல வீடியோ வெளியிட்டு நியுசிலாந்து வீரரை...' - 'கிண்டல்' செய்த சேவாக்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா மோதிகொண்ட நிலையில் சேவாக் போட்ட ஒரு ட்விட் தற்போது வைரலாகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகள் மோதி வருகின்றன.
சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் ரிசர்வ் நாளான இன்று, இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் போட்டி டிராவில் முடியுமா அல்லது வெற்றியில் முடியுமா என்பது என பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்களையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்களையும், அஸ்வின் 2 மற்றும் ஜடேஜா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதில், நியூசிலாந்து அணியின் கேப்டன் 177 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் அவுட்டாகினார். கேன் வில்லியம்சன் சுமார் 30 ஒவர்களை எதிர்கொண்டு வெறும் 49 ரன்களை மட்டுமே எடுத்தார்.
கேன் வில்லியம்சன்னின் மெதுவான ஆமை வேக பேட்டிங்கை கடுமையாக விமர்சித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் நாய் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், நாய் ஒன்று அசந்து தூங்குவது போன்ற வீடியோ ஒன்றை பகிர்ந்து, 'இன்று ஆடுகளத்தில் வில்லியம்சன்' என சேவாக் ட்வீட் செய்துள்ளார்.
Williamson on the pitch today.#WTC21final pic.twitter.com/TBGLHSb0E4
— Virender Sehwag (@virendersehwag) June 22, 2021

மற்ற செய்திகள்
