'என்ன நடந்தாலும் கேப்டன் முன்னிலையில தான் கல்யாணம் பண்ணுவோம்!'... மணமக்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த விஜயகாந்த்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 22, 2020 01:31 PM

கொரோனா அச்சுறுத்தலால் விஜயகாந்த் வீட்டிலேயே தேமுதிக நிர்வாகியின் ஒருவரின் திருமணம் நடைபெற்றுள்ளது.

marraige in dmdk leader vijayakanth\'s house amid janata curfew

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று ஊரடங்கு உத்தரவிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இன்று முகூர்த்த நாள் என்பதால் பல திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேமுதிக மாநில தொழிற் சங்க பேரவை துணை செயலாளரான வேணு ராம் அவர்களின் இல்லத் திருமண விழா தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் கோலாகலமாக நடக்க இருந்தது.

இதற்கிடையில், கொரோனா அச்சுறுத்தலால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில், நெருங்கிய உறவினர்கள் கலந்துகொள்ள எளிய முறையில் இன்று நடந்தது. இதில், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருமணத்தில் அனைவருமே மாஸ்க் அணிந்திருந்தனர். அதுமட்டுமின்றி, ஹேண்ட் சானிடைசரும் வழங்கப்பட்டது.

மணமக்களுக்கு விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். 

 

Tags : #VIJAYAKANTH #DMDK #CORONAVIRUS #JANATACURFEW