'உங்க குழந்தைகள் அதிகமாக நொறுக்குத்தீனி சாப்பிடுகிறார்களா'?... 'காத்திருக்கும் பேராபத்து'... எச்சரிக்கும் மருத்துவர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Feb 05, 2021 03:59 PM

குழந்தை பருவத்தில் நொறுக்குத் தீனி அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

junk foods snacks one of the main reasons for cancer children doctors

குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்கள் குறித்து பேசிய அடையாறு புற்றுநோய் மையம் மருத்துவர்கள், நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கத்திற்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கும்  இடையேயான தொடர்பை விவரித்துள்ளனர்.

"நொறுக்குத்தீனி சாப்பிடுவது மட்டுமே புற்றுநோய் ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. பல முக்கிய காரணங்களில் ஒன்று, நொறுக்குத் தீனி. அதிக அளவில் ரசாயனம் கலக்கப்பட்ட பிஸ்கட், சிப்ஸ், பொறிக்கப்பட்ட கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகள் மற்றும் செயற்கை வண்ணங்களைக் கொண்ட ரசாயன பழச்சாறுகள் போன்றவற்றை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் குழந்தைகள், ஆரோக்கியம் இல்லாமல் இளம்வயதில் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கு அதிகம்" என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் சுமார் 20% பேருக்கு புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருப்பது முறையற்ற உணவுப்பழக்கம் என்று குறிப்பிடுகின்றனர்.

பல கடைகளில் தந்தூரி என்ற பெயரில் கோழி இறைச்சி மீது, பலவிதமான ரசாயனங்களை தடவி எண்ணெயில் பொறித்து விற்கிறார்கள். குழந்தைகளுக்கு தேவையற்ற அளவில் பக்கெட் சிக்கன், சிக்கன் 65, சில்லி சிக்கன் என பல பெயர்களில் கோழி இறைச்சி விற்கப்படுகிறது.

இதுபோன்ற முறையில் சமைக்கப்படும் உணவுகளும், அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதும், முற்றிலும் ஆபத்தானது என அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன.

தேவைக்குமீறிய அளவில் பொறித்த துரித உணவுகள், பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் மலிவு விலையில் விற்கப்படும் பிஸ்கட், கேக் போன்றவை இலவச பொருட்களுடன் விற்கப்படும் தீனிகள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் விளம்பரம் செய்யும் ரசாயனம் சேர்க்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை பெற்றோர்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பெற்றோர்களின் உண்ணும் பழக்கம் குழந்தைகளிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சிறுவயதில் இருந்து குழந்தைகளிடம் விளம்பரம் செய்யப்படும் பொருட்களுக்கும், வீட்டில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான பொருட்களுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கு புரியவைக்க பெற்றோர்கள் முயற்சி செய்வதுதான், குழந்தைகளின் ஆரோக்கியத்தை காப்பாற்ற அவர்கள் செய்யும் முதல்முயற்சி என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Junk foods snacks one of the main reasons for cancer children doctors | Tamil Nadu News.