'யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலியே'... 'இறங்கிய வேகத்தில் எகிறிய கொரோனா '.... 'என்ன செய்ய போறோம்'... அச்சத்தில் மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த நாடு மட்டும் இவ்வளவு விரைவாக கொரோனாவில் இருந்து விடுதலை பெற்றது விட்டது என உலகநாடுகள் அனைத்தும் வியந்து பார்த்த நிலையில் தென்கொரியாவிற்கு புதிய சோதனை தற்போது வந்துள்ளது.
பிப்ரவரி மாதம் முதல் தென்கொரியாவில் கொரோனா பரவ தொடங்கிய நிலையில், மார்ச் மாதம் அது உச்சத்திற்குச் சென்றது. டேகு நகரத்தில் இருக்கும் தேவாலயத்திலிருந்து தான் பலருக்கும் பரவியது. ஆனால் தற்போது சியோலைச் சுற்றிலும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. கூபாங் என்றழைக்கப்படுகிற ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் சரக்கு கிடங்கிலிருந்து 146 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி தென்கொரியாவில் கொரோனா தொற்று 11 ஆயிரத்து 947 பேரைப் பாதித்திருக்கிறது, 276 பேரைப் பலி கொண்டிருக்கிறது என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் தகவல் சொல்கிறது. கொரோனாவில் இருந்து விடுதலை பெற்ற தென் கொரியா, சில வாரங்களுக்கு முன்பு தான், தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாகப் பரவி வருவது, அந்த நாட்டின் 5 கோடியே 10 லட்சம் மக்களின் வாழ்க்கையும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது. இதனிடையே கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலைகளைத் தந்துள்ள போதும், நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு, வலுவான கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகள் எதிர்த்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் நாடு மற்றொரு கொரோனா வைரஸ் நெருக்கடியில் சிக்கக் கூடும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான கொரியா மையங்களின் இயக்குநர் ஜங் யூன் கியோங் எச்சரித்துள்ளார்.