"கார் காணாம போனது லண்டன்'ல.. கெடச்சது பாகிஸ்தான்'ல.." உலகளவில் அதிர வைத்த சம்பவம்!!.. எப்படி நடந்தது??
முகப்பு > செய்திகள் > உலகம்லண்டனில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கோடி மதிப்புள்ள கார் ஒன்று திருடப்பட்ட நிலையில், அது மீட்டெடுக்கப்பட்ட இடம் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
Also Read | "புலிக்குட்டி விற்பனைக்கு".. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர் பரபரப்பு கைது.!
பென்ட்லி மோட்டார்ஸ் நிறுவனம், உலகளவில் சிறந்த கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பென்ட்லி முல்சேன் ரக கார், மிகவும் விலை உயர்ந்த ஒன்றாகும். இந்த வகை கார்கள் முழுக்க முழுக்க கைகளை கொண்டு வடிவமைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இந்திய மதிப்பில் சுமார் 2.5 கோடி ரூபாய்க்கு இந்த பென்ட்லி முல்சேன் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இப்படி விலை மதிப்புள்ள இந்த கார், சமீபத்தில் லண்டன் பகுதியில் திருடு போயிருந்தது. இதன் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அப்படி இருக்கையில், கடும் அதிர்ச்சி தகவல் ஒன்று அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. லண்டனில் காணாமல் போன கார், பாகிஸ்தான் நாட்டில் இருந்தது தான். கிழக்கு ஐரோப்பிய நாட்டின் உயர் தூதர் ஒருவரின் ஆவணங்களை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு காரை இறக்குமதி செய்திருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, இது தொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர்.
இதன் பின்னர், பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் லண்டனில் திருடு போன பென்ட்லி முல்சேன் கார் இருப்பது பற்றி தகவல் கிடைத்துள்ளது. இதன் பின்னர் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பங்களாவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அந்த கார் பங்களாவுக்குள் இருப்பது உறுதியானது.
அந்த காரின் உரிமையாளர் என கூறப்பட்ட நபரிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்த போது அவை போலியானது என்றும் கார் போலியாக பதிவு செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது. திருடப்பட்ட கார் கடத்தப்பட்டதன் மூலம், பாகிஸ்தான் நாட்டு ரூபாயில் 300 மில்லியனுக்கு அதிகமான வரி ஏய்ப்புசெய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தாக்கல் செய்த எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, கார் பதுக்கி வைக்கப்பட்ட பங்களாவுக்கு அருகே இருந்த வீட்டில் உரிமம் இல்லாத ஆயுதங்கள் இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். லண்டனில் காணாமல் போன கார், பாகிஸ்தானின் கராச்சியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் கடும் பதற்றத்தை உண்டு பண்ணி உள்ளது.
Also Read | பேட்டால் அடிக்க ஓங்கிய பாகிஸ்தான் வீரர்... களத்தில் சண்டை போட்ட வீரர்கள்.. உச்சகட்ட சர்ச்சை!!