88-வது கல்யாணத்துக்கு ரெடியான 61 வயசு தாத்தா.. மணப்பெண் யாருன்னு பாத்துட்டு ஷாக் ஆன மக்கள்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Nov 02, 2022 06:00 PM

இந்தோனேஷியாவில் 61 வயது தாத்தா ஒருவர் 88 வது முறையாக திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல் உலக அளவில் பலராலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Indonesian Man Marrying For 88th Time who is playboy king

Also Read | காதலனுக்கு கஷாயத்தில் விஷம்.. இணையத்தில் காதலி Search செய்த விஷயம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள மஜலெங்கா பகுதியை சேர்ந்தவர் கான். இவருக்கு தற்போது 61 வயது ஆகிறது. விவசாயியான கானுக்கு ஏற்கனவே 87 முறை திருமணம் ஆகிவிட்டதாம். தன்னுடைய 14 வயதில் முதல் திருமணம் நடைபெற்றதாக உள்ளூர் ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார் கான். இந்நிலையில் 88 வது கல்யாணத்தை எதிர்கொண்டு காத்திருக்கிறார் இந்த 61 வயது தாத்தா.

14 வயதில் முதல் முறை திருமணம் செய்துகொண்டாலும் மணவாழ்க்கை 2 ஆண்டுகளில் முறிந்து போனதாகவும் கான் கூறியதாக தெரிகிறது. இதற்கு தன்னுடைய விளையாட்டு குணமே காரணம் எனக்கூறியுள்ளார் அவர். அதன்பிறகு, பெண்களது குணங்களை மதித்து நடந்து கொண்டதாகவும், அவர்களுக்கு பிடிக்காததை தான் ஒருபோதும் செய்ததில்லை எனவும் கூறியுள்ளார் கான்.

Indonesian Man Marrying For 88th Time who is playboy king

இந்நிலையில், தனது 88 வது திருமணத்திற்கு தயாராகி வருகிறார் கான். தன்னுடைய முன்னாள் மனைவி ஒருவரையே இப்போது கான் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகை உள்ளது. அதாவது 86 வது முறையாக கான் திருமணம் செய்துகொண்ட பெண்ணை திருணமாகி சில மாதங்களிலேயே பிரிந்திருக்கிறார் அவர். ஆனாலும், தங்களுக்குள் இருந்த காதல் ஒருபோதும் குறையவில்லை எனவும், அதனாலேயே மீண்டும் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் அவர்.

இதுபற்றி பேசிய அவர்,"எங்களுக்கு திருமணமாகி சில மாதங்களிலேயே நாங்கள் பிரிந்துவிட்டோம். ஆனால், எங்களுக்கு இடையே இருந்த அன்பு அப்படியே தான் இருந்தது" என்றார். இதனிடையே, 88 வது திருமணத்திற்கு தயாராகி வரும் கானுக்கு இதுவரையில் எத்தனை குழந்தைகள் இருக்கின்றன என்பதே தெரியவில்லை என்கிறார்கள் கிராம மக்கள். அதேபோல, அவரது பிற மனைவிகளை பற்றியும் தகவல்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | ப்பா...நூறு ஆயுசு.. மழையால் முறிந்து விழுந்த மரம்.. நூலிழையில் தப்பித்த வாகன ஒட்டி.. திக்..திக்.. வீடியோ..!

Tags : #INDONESIAN #MARRY #PLAYBOY #PLAYBOY KING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indonesian Man Marrying For 88th Time who is playboy king | World News.