VIDEO: ‘காலேஜுக்குள் லவ் புரோபோஸ்’!.. வைரலான காதல் ஜோடி.. அதிரடி ஆக்ஷன் எடுத்த யுனிவெர்சிட்டி நிர்வாகம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இளம்பெண் ஒருவர் கல்லூரியில் சக மாணவரிடம் காதலை வெளிப்படுத்திய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானில் உள்ள முன்னணி கல்லூரியான லாகூர் பல்கலைக்கழகத்தில் (University of Lahore) பயின்ற கல்லூரி மாணவி ஒருவர், கல்லூரி வளாகத்தில் சக மாணவர் ஒவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். தரையில் முட்டியிட்டு அந்த இளைஞரிடம் ரோஜா பூ கொடுத்து அப்பெண் தனது காதலை சொல்ல, உடனே ரோஜாவை வாங்கிக்கொண்ட இளைஞர் அப்பெண்ணை கட்டியணைத்து காதலை ஏற்றுக்கொண்டார்.
இதனை அக்கல்லூரியில் படிக்கும் சக மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து ஆரவாரம் செய்தனர். இதனை அடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
The University of Lahore has expelled both students Hadiqa Javed and Shehryar Ahmed for embracing, giving flowers and presenting each other on the campus.
What's your take on Proposal? #UniversityOfLahore #proposal pic.twitter.com/KLILurngBi
— Hamza Javed (@hamzajaved261) March 12, 2021
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் சென்றுள்ளது. உடனே அந்த இருவரையும் விசாரணைக்கு வருமாறு கல்லூரி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அவர்கள் விசாரணைக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
University of Lahore administration purportedly expelled Hadiqa and Shehryar from university for publicly going for marriage proposal & momentary display of affection. University says both students violated code of conduct and committed gross misconduct in the university. pic.twitter.com/MDIVJ4Mk9U
— Zahid Gishkori (@ZahidGishkori) March 12, 2021
இதனால் கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கையில் அடிப்படையில் அந்த இரண்டு மாணவர்களையும் கல்லூரியில் இருந்து நீக்கியுள்ளதாக லாகூர் பல்கலைக்கழக நிர்வாகம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்லூரி வளாகத்தில் அவர்கள் இருவரும் நுழைய தடை விதித்தும் அக்கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Ridiculous. https://t.co/DxVGXVpdqq
— Bakhtawar B-Zardari (@BakhtawarBZ) March 13, 2021
இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் (Benazir Bhutto) மகள் பக்தவர் பூட்டோ-ஷர்தாரி (Bakhtawar Bhutto-Zardari), கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.