"என்னோட கிரிக்கெட் வாழ்க்கை'லயே".. தோனி குறித்து கோலி போட்ட 'EMOTIONAL' பதிவு.. மனம் உருகிய கிரிக்கெட் ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் எதிர்பார்த்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், நாளை (27.08.2022) ஆரம்பமாகிறது.
![Virat kohli recent post about ms dhoni fans get emotional Virat kohli recent post about ms dhoni fans get emotional](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/virat-kohli-recent-post-about-ms-dhoni-fans-get-emotional.jpg)
ஆசிய கோப்பையில் பங்குபெற்றுள்ள அணிகள், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள், 'குரூப் A'வில் இடம்பெற்றுள்ளது.
அது போல, 'குரூப் B'ல் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.
ஆசிய கோப்பையின் முதல் போட்டியில், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள்.மோதுகிறது. அதே போல, ஆசிய கோப்பையின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளான போட்டி என்றால், அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தான். இந்த இரண்டு அணிகளும், நாளை மறுநாள் (28.08.2022) பலப்பரீட்சை நடத்துகின்றது.
இந்த போட்டியை ரசிகர்கள் பெரிய அளவில் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், இந்திய ரசிகர்கள் பெரிதும் பேசி வரும் விஷயம், கோலியின் ஃபார்ம் குறித்து தான். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக சதம் கூட அடிக்காமல் இருந்து வரும் கோலி, சமீபத்திய தொடர்களில், பெரிய அளவில் ரன் அடிக்காமலும் இருந்து வருகிறார்.
கடந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய தொடர்களில், கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தால், ஆசிய கோப்பையில் அவர் பேட்டிங் மீது அதிக நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர். அப்படி ஒரு சூழ்நிலையில், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 14 ஆண்டுகள் கடந்திருந்த கோலி, முன்னாள் இந்திய கேப்டன் தோனி குறித்து பகிர்ந்த பதிவு, இணையத்தில் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
தோனியுடன் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த விராட் கோலி, தன்னுடைய கேப்ஷனில், "தோனியின் நம்பிக்கைக்குரிய பார்ட்னராக இருப்பது எனது கிரிக்கெட் வாழ்வில் மிகவும் உற்சாகமான மற்றும் மகிழ்ச்சியான காலகட்டம் ஆகும். எங்களுடைய பார்ட்னர்ஷிப் எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். 7+18" என தங்களின் ஜெர்சி நம்பரை கடைசியில் குறிப்பிட்டுள்ளார்.
தோனி குறித்து விராட் கோலி தெரிவித்துள்ள கருத்து, நெட்டிசன்கள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)