எப்பவும் மாட்டுக்கறி தான் சாப்பாடு.. இது நடுவுல, ஜாலியா படம் பாத்து ரசிச்சு இருக்காராம்.. வடகொரியா அதிபர் குறித்த புதிய தகவல்
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியா அதிபர் கிம் சமீபத்தில் திரைப்படம் ஒன்றை ரசித்து பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்றான வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், மிக மிக வித்தியாசமானவர். அடிக்கடி அவரை பற்றிய பல விதமான தகவல்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் பரபரப்பை உண்டு பண்ணும்.
வடகொரிய நாட்டை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, வறுமை சூழ்ந்துள்ளது. அது மட்டுமில்லாமல், பல பொருளாதார சிக்கல்கள், உணவு பஞ்சம் என கடுமையான சூழலுக்கு அந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதிர்ச்சியை கிளப்பிய அதிபர்
இதற்கு நடுவே, இன்னொரு பக்கம் நாட்டில் புயல் வந்து, நிலைமையை இன்னும் மோசமாக்கியது. இதனால், உணவுக்கான ஆதாரம் கிடைக்காமல், பெரும் கொடுமையான சூழலில் அந்நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் வறுமை காரணமாக, 2025 ஆம் ஆண்டு வரை, மக்கள் குறைவாக தான் சாப்பிட வேண்டும் என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மக்களிடம் கேட்டுக் கொண்டது, அதிர்ச்சியை கிளப்பியிருந்தது. இன்னொரு பக்கம், கிம் ஜாங் மட்டும் மாட்டுக்கறியை தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்
இதே போல, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், அதிபர் ஜிம் ஜாங்கின் தாத்தா இறந்து போனார். அதன் துக்க நாட்கள் நீங்கும் வரை, நாட்டு மக்கள் யாரும் சிரிக்கவே கூடாது என ஸ்ட்ரிக்ட் கண்டிஷனும் போட்டிருந்தார். இப்படி, தன்னுடைய அறிவிப்புகளாலேயே மக்களை நடுங்க செய்பவர் கிம் ஜாங் உன்.
ஆவணப்படம்
அப்படிப்பட்ட அதிபர் கிம் ஜாங் உன் குறித்து தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. படம் ஒன்றை பார்த்த கிம், அதனை முழுவதும் ரசித்து பார்த்து, பூரிப்பு அடைந்தும் போயுள்ளாராம். கடந்த இரண்டு வருடங்களாக வடகொரியா ஏவுகணை தயாரிப்பு, வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வடகொரியா கம்யூனிச அரசு மேற்கொண்ட முயற்சி உள்ளிட்ட பல சாதனைகளை வைத்து, ஆவணப்படம் ஒன்றை எடுத்திருந்ததாக கூறப்படுகிறது.
ரசித்து பார்த்த கிம் ஜாங் உன்
இதனை கிம் ஜங்கிற்கும் போட்டுக் காட்டியுள்ளனர். வடகொரிய ஆட்சி குறித்து, 110 நிமிடங்கள் ஓடும் அந்த படத்திற்கு, '2021, A Great Victorious Year' என பெயரிடப்பட்டுள்ளது. அவரது சாதனை பற்றி, ஆவணப்படத்தில் குறிப்பிடும் போதெல்லாம், கைதட்டி ரசித்து பார்த்ததாக கூறப்படுகிறது.
மக்குளுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகளைக் கையாண்டு வரும் கிம் ஜாங் உன், தன்னுடைய ஆவணப்படத்தை ரசித்து பார்த்த சம்பவம் பற்றி, பலரும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.