ஐயோ, அவரா இது...? 'எப்படி' இருந்த மனுஷன்...? ஆள் 'அடையாளம்' தெரியாத அளவுக்கு 'சேஞ்ச்' ஆன வடகொரிய அதிபர்...! ஏன் இப்படி ஆயிட்டாரு...? - வைரல் ஃபோட்டோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரியாவில் வரலாறு காணாத கடும் பஞ்சம் நிலவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீனாவில் இருந்து வரும் பொருட்களை வடகொரியா தவிர்த்து வருகிறது. அதோடு, சீனாவும் தற்போது அதன் எல்லைகளை மூடியுள்ளது.
இதுமட்டுமல்லாமல், வடகொரியாவில் ஏற்பட்ட புயல் மழை காரணமாக விவசாயம் நசிந்து அங்கிருக்கும் மக்கள் கடும் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக சமீபத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் வடகொரிய மக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
ஏற்கனவே வடக்கொரியா மக்கள் சத்தான உணவு பொருட்களை உண்ணுவது இல்லை எனவும், குழந்தைகளும்,, வயதானவர்களும் சத்து குறைபாட்டால் இறக்கும் விகிதமும் அதிகரித்துள்ளதாக ஐ.நா அறிவித்தது.
தற்போது, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. இதற்கு முன் நன்றாக உருண்டை முகமாக கொழுகொழுவென இருந்த அதிபர் கிம் இந்த புகைப்படத்தில் மெலிந்து கட்டுமஸ்தான உடலுடன் காணப்படுகிறார்.
அதிபர் கிம் இதற்கு முன் அதிக உடல் எடையுடன் இருந்ததால் அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லை எனவும், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகின. இதுமட்டுமல்லாமல், பொது நிகழ்ச்சிகளில் கிம் ஜாங் போலவே இருக்கும் வேறு ஒரு நபர் பங்கேற்பதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டு புலனாய்வு துறை அதிகாரி கிம் பியுங் கீ, அதிபர் கிம் முன் இருந்ததை விட 20 கிலோ எடை குறைத்துள்ளதாகவும், தற்போது முன்பை விட ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.