'வட கொரிய அதிபரின் சகோதரி எடுத்த அதிரடி முடிவு'... 'நான் சொல்ல மாட்டேன் செஞ்சு காட்டுவேன்'... அனல் பறக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்வட கொரிய அதிபர் கிம்மின் சகோதரி எடுத்துள்ள முடிவு சர்வதேச அளவில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தான் சர்வ அதிகாரங்களையும் பொருந்தியவர். அவரது கண் அசைவுக்கு ஏற்ப தான் வட கொரியாவில் அனைத்தும் நடக்கும். அவருக்கு அடுத்தபடியாக அனைத்து அதிகாரங்களையும் கொண்டவர் தான் கிம்மின் சகோதரி கிம் யோ ஜோங். கிம் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் கூட ஆட்சி அதிகாரத்தை கிம் யோ தான் கவனித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வட கொரியா அண்மையில் ஏவுகணை சோதனை செய்தது. இது நாங்கள் சர்வ வல்லமை பொருந்தியவர்கள் என்பதை உலகிற்குக் காட்டவே வட கொரியா இதனைச் செய்ததாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்தார்கள். இது ஒருபுறம் இருக்க கிம்மின் சகோதரி தென் கொரியாவுடனான பேச்சுவார்த்தைக்குத் தயார் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கிம் யோ ஜோ, ''கொரியப் போருக்கு முடிவு கட்ட வேண்டும் எனத் தென் கொரியா முன்வந்திருப்பது மிகவும் நல்ல செய்தி. ஆனால் அதற்கு முன்னர் வடகொரியா மீதான வெறுப்புணர்வைக் கைவிட வேண்டும். போர் நிறுத்தப் பிரகடனம் சாத்தியப்பட, பரஸ்பரம் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் மரியாதை கொள்ள வேண்டும். முன்முடிவுகளுடன் கூடிய பார்வையைக் கைவிட வேண்டும். அதோடு அவர்கள் தங்கள் இரட்டை கொள்கைகளைக் கைவிட வேண்டும் எனவும்'' தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஐ.நா வருடாந்திர பொதுச் சபைக் கூட்டத்தில் பேசிய தென் கொரிய அதிபர் மூன் ஜே, 71 ஆண்டுகளுக்கு முன் கொரியாவில் ஏற்பட்ட மோதலுக்கு முடிவு கட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.