கண் இமைக்கும் நேரத்துக்குள்ள 'கடல்'ல வந்து விழுந்துச்சு...! 'கண்டிப்பா இது அவங்க வேலை தான்...' 'எப்போ என்ன நடக்கும்ன்னு தெரியலையே...! - அச்சத்தில் உலக நாடுகள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரிய நாடு மறுபடியும் செய்துள்ள சம்பவம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச நாடுகள் காட்டுக்கத்து கத்தினாலும் வடகொரியா அரசு எதையும் காதில் வாங்காமல் வழக்கம் போல் தொடர் ஏவுகணை பரிசோதனை நிகழ்த்தி வருகிறது.
இப்போது அந்த வரிசையில் சீனாவும் இணைந்துக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன் அணு ஆயுத ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. இந்த பதற்றமே தணியாத நிலையில் மீண்டும் வடகொரியா ஜப்பான் கடல் பகுதியின் மீது ஏவுகணையை செலுத்தியுள்ளது.
இதுகுறித்து உலக செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரியாவின் சின்போ துறைமுகத்தில் இருந்து இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் அவை தங்கள் நாட்டு கடல்பகுதியில் விழுந்ததாகவும் ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஜப்பான் அரசின் இந்த அறிவிப்பை வடகொரியா நாட்டின் அருகில் உள்ள தென் கொரிய ராணுவமும் உறுதி செய்துள்ளது. அதோடு, இந்த ஏவுகணை சோதனை வடகொரிய நாட்டின் நீர்மூழ்கி கப்பலில் இருந்து வீசப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அண்மை காலமாக வடகொரியா நாட்டை சீண்டும் வகையில் தென்கொரியாவும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பமே பதற்றத்தில் மூழ்கியுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.