Udanprape others

அந்த 'வேதனை' என் வாழ்க்கை முழுக்க இருந்துச்சு...! 'கொரோனா தொற்று ஏற்பட்டு முன்னாள் வெளியுறவுச் செயலர் மறைந்தார்...' - சோகத்தில் மூழ்கிய அமெரிக்கா...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Oct 19, 2021 12:54 PM

அமெரிக்காவின் முதல் கருப்பின வெளியுறவுத்துறை செயலரான காலின் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Former US secretary of state Colin Powell dies of corona

அமெரிக்காவின் முன்னாள்  வெளியுறவுச் செயலரான காலின் பாவலுக்கு (Colin Powell) 84 வயதாகிறது. இவர் அமெரிக்காவின் முதல் கருப்பின வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமைக்குரியவர்.

Former US secretary of state Colin Powell dies of corona

ஜமைக்கா நாட்டை பூர்விகமாக கொண்ட காலின் பாவெல் அமெரிக்க ராணுவத்தின் முப்படை தலைமை தளபதியாகவும் பணி புரிந்தவர். 1991 ஆண்டு வளைகுடா போருக்குப் பின் அமெரிக்காவில் பாவெலின் மதிப்பு பல மடங்கு அதிகரித்தது.

அதோடு, அவரை அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராக அறிவிக்க மக்களே ஆதரவுக்குரல் எழுப்பினர். தற்போது 84 வயதான காலின் பாவெல் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்துள்ளார். காலின் பாவெலுக்கு அல்மா என்ற மனைவியும், மிச்செல், லிண்டா மற்றும் ஆன் மேரி என்ற குழந்தைகளும் உள்ளனர்.

Former US secretary of state Colin Powell dies of corona

இதுகுறித்து பாவெலின் குடும்பத்தினர் சமூக ஊடகத்தில் பகிர்ந்த செய்திக் குறிப்பில், 'நாங்கள், ஒரு அன்பான கணவரை, தகப்பனை, தாத்தாவை ஒரு நல்ல அமெரிக்கரை இழந்துவிட்டோம்.

காலின் கொரோனா வைரஸிற்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திய நிலையிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்' என தெரிவித்துள்ளனர்.

Former US secretary of state Colin Powell dies of corona

காலின் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி, 21 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் என அமெரிக்க வெளியுறவு கொள்கையை வகுப்பதில் மிக முக்கியப் பங்காற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. என்னதான் காலின் அமெரிக்காவிற்கு பல சிறந்த விஷயங்கள் செய்திருந்தாலும் அவரது வாழ்விலும் ஒரு கருப்பு புள்ளி இருப்பதாக காலினே தெரிவித்துள்ளார்.

அதாவது ஈராக்கில் பேராபத்து அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சதாம் உசேன் கொல்லப்பட்டதோடு, ஈராக்கில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அணு ஆயுதங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ஈராக் போருக்கான நியாயத்தை எடுத்துரைக்க முடியாமல் பாவெல் திணறினார். அதோடு, ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு அவர் ஒருமுறை அளித்தப் பேட்டியில், 'அது ஒரு கருப்புப் புள்ளி. எனது வரலாற்றில் எப்போதும் அது இருக்கும். அது அப்போதும் வேதனை அளித்தது. இப்போதும் வேதனை அளிக்கிறது' எனவும் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Former US secretary of state Colin Powell dies of corona | World News.