அண்ணன் வீட்டிற்கு பேருந்தில் கிளம்பிய பெண்.. 10 நாளுக்கு பிறகு தெரிய வந்த உண்மை.. அதே நாளுல 'பஸ்' டிரைவரும் 'மிஸ்ஸிங்'
முகப்பு > செய்திகள் > உலகம்நைஜீரியா : கடைசியாக பேருந்தில் சென்ற இளம்பெண் மாயமாகி இருந்த நிலையில் அவரது உடல், பத்து நாட்களுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவைச் சேர்ந்தவர் ஒலுவாபாமிஸ் அயனோலா. பேஷன் டிசைனராக இவர் பணிபுரிந்து வருகிறார்.
அந்நாட்டின் ஓசோடி என்னும் நகரில் இருந்து அவரது சகோதரர் வசித்து வரும் இடிமு என்னும் நகரத்திற்கு செல்வதற்கு வேண்டி, பேருந்து ஒன்றில் அயனோலா ஏறியுள்ளார்.
போலீசார் தீவிர விசாரணை
இதனைத் தொடர்ந்து, தான் சென்று சேர வேண்டிய அண்ணனின் வீட்டிற்கு, அயனோலா சென்று சேரவில்லை. கடந்த பிப்ரவரி மாத இறுதியில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில், யாபா நகர் என்னும் பகுதியில் சடலமாக அவர் மீட்கப்பட்டுள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு, காணாமல் போன நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அவர் எப்படி உயிரிழந்திருப்பார் என்பது பற்றி, தீவிர விசாரணையில் போலீசார் இறங்கினர்.
தோழிக்கு மெசேஜ்
மேலும், இளம்பெண் அயனோலா உடம்பில் இருந்த காயத்தினை வைத்து, ஏதேனும் சடங்கிற்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, அயனோலா பேருந்து ஏறிய சமயத்தில், அவருடைய தோழி ஒருவருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
பாதுகாப்பாக உணரவில்லை
அந்த பேருந்தில் இருப்பதை தான் பாதுகாப்பாக உணரவில்லை என்றும், தோழியிடம் அயனோலா தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், பேருந்தில் இருந்தவாறு வீடியோக்கள் மற்றும் சில வாய்ஸ் மெசேஜ்களையும் தோழிக்கு அனுப்பியுள்ளார். இதன் காரணமாக, அயனோலாவின் தோழியும் தொடர்ந்து மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்துள்ளார்.
மாயமான அயனோலா
ஒரு கட்டத்திற்கு மேல், அயனோலாவிடம் இருந்து எந்த மெசேஜ்களும் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், பதறிய தோழி உடனடியாக போன் செய்து பார்த்துள்ளார். ஆனால், அயனோலா போன் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, பேருந்தில் சென்ற அயனோலா மாயமானது தெரிய வந்துள்ளது.
அண்ணன் அளித்த புகார்
இது தொடர்பாக, அயனோலாவின் அண்ணன் அளித்த புகாரின் பெயரில்,போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது தான், பத்து நாட்களுக்கு பிறகு, இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதே போல, பேருந்தினை ஓட்டி வந்த ஆண்ட்ரூம் என்பவர், அயனோலா காணாமல் போன பிறகு மாயமானதும் தெரிய வந்துள்ளது.
ஓட்டுநர் மாயம்
இதனைத் தொடர்ந்து, ஆண்ட்ரூம் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த நண்பர் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அப்போது, பேருந்தில் வைத்து இளம்பெண் உடலில் காயத்தினை ஏற்படுத்தி, பேருந்தில் இருந்து ஓட்டுநர் ஆண்ட்ரூம் தள்ளி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தீவிர விசாரணை
அதே போல, பேருந்துகளில் அயனோலாவை போன்று பயணம் மேற்கொண்ட வேறு பெண்களுக்கும் இது போன்று ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
கோரிக்கை
இளம்பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்த போது, மாயமாகி உயிரிழந்து போன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் நைஜீரிய மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
"'தோனி' மனைவியா இருக்குறதால படுற கஷ்டம்.." மனம் திறந்த சாக்ஷி.. "இந்த ஒண்ணு தான் ரொம்ப கொடுமை"