"முதல் 'மனைவி'ய பிரிஞ்சு 11 வருஷமாச்சு... ஆனா அவ இப்டி பண்ணுவான்னு நான் 'கனவு'ல கூட நினைக்கல... இடியாய் வந்திறங்கிய 'பேரதிர்ச்சி'... நொறுங்கிப் போன 'கணவர்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்முதல் மனைவியை பிரிந்து சுமார் 11 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், தனது முதல் மனைவி மூலம் பிறந்த குழந்தைகள் குறித்து தெரிய வந்த தகவல் ஒன்று, நீதிபதி ஒருவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அந்தோணி ஒகோரோடஸ் (Anthony Okorodas) என்பவர் நீதிபதியாக இருந்து வருகிறார். இவர் செலியா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்த நிலையில், இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் இருந்தது. இந்நிலையில், செலியாவுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் செலியாவை Okorodas விவாகரத்து செய்தார்.
இதனையடுத்து, அந்தோணி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தாலும், முதல் மனைவியின் மூன்று குழந்தைகளின் படிப்பு செலவையும் தற்போது அவரை அவரே கவனித்து வந்துள்ளார். இதனிடையே, தனது முதல் மனைவி செலியா மூலம் பிறந்த மூன்று குழந்தைகளுக்கும் தான் தந்தையில்லை என்றொரு தகவல், அந்தோணிக்கு கிடைத்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்த அந்தோணி, தனது முதல் மனைவியின் மூன்று பிள்ளைகளுக்கும் DNA பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளார்.
ஆனால், கொரோனா தொற்று காரணமாக, அதற்கான வாய்ப்பு உடனடியாக அமையவில்லை. இதற்காக, கடந்த செப்டம்பர் மாதம் வரை காத்திருந்த அந்தோணி, அதன் பின்னர், மூன்றில் இரண்டு குழந்தைகளுக்கு DNA பரிசோதனை மேற்கொள்ளச் செய்தார். இதில், அதிர்ச்சி உண்மை காத்திருந்தது. இரண்டு பேரும், அந்தோணியின் குழந்தைகள் இல்லை என்பது தான் அது.
மூன்றாவது குழந்தைக்கும் கடந்த ஜனவரி மாத இறுதியில், DNA சோதனை செய்து பார்த்ததில் அவரும் அந்தோணியின் குழந்தை இல்லை என்பது நிரூபணமானது. இதுகுறித்து, முதல் மனைவி செலியா, ஒப்புக் கொள்ளாத நிலையில், இறுதியில் அது உங்களின் குழந்தையில்லை என அந்தோணியிடம் தெரிவித்துள்ளார்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, உண்மை என்ன என்பது தெரிய வந்ததும் நிலைகுலைந்து போன அந்தோணி, நான் மட்டுமில்லாமல், எனது இரண்டாவது மனைவி கூட செலியாவின் செயலால் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளானதாக அந்தோணி கூறியுள்ளார்.
இரண்டாவது மனைவி மூலம் நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், இனியும் முதல் மனைவியின் மூன்று குழந்தைகளின் படிப்பு செலவை நானும், எனது மனைவியும் தொடர்ந்து கவனித்துக் கொள்வோம் என்றும் அந்தோணி மிகவும் கனத்த இதயத்துடன் தெரிவித்துள்ளார்.