'டிவிட்டர வெளிய அனுப்பியாச்சு...' இனி நமக்கு அந்த 'இந்திய ஆப்' தான் எல்லாம்...! 'அதிரடி காட்டிய நாடு...' - மகிழ்ச்சியில் 'ஆப்' நிறுவனர்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்திய செயலியான 'கூ'-வில் நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்கி, அதிகாரப்பூர்வ தகவல்கள் இனி இந்த செயலியில் தான் வெளியாகும் என அறிவித்துள்ளது.
நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சிவில் போர் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.
இது தொடர்பாக நைஜீரிய நாட்டு அதிபரான முகமது புஹாரி, 1967-70 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கொள் காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதிபரின் அந்த கருத்து வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி அதை அதிபரின் வலைதள பக்கத்தில் இருந்து டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.
இதனால் கடுப்பான நைஜீரிய அரசு, தங்கள் நாட்டில் டுவிட்டருக்கு தடை விதித்தது. அதோடு டுவிட்டரில் இருந்து வெளியேறிய நைஜீரியா அரசு தங்கள் நாட்டில் பொதுமக்கள் டுவிட்டர் பயன்படுத்தவும் தடைவிதித்ததுள்ளது. அரசின் ஆணையை மீறி டுவிட்டர் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் ட்விட்டரில் இருந்து வெளியேறிய நைஜீரிய அரசு இந்தியாவில் உருவாக்கப்பட்ட 'கூ' செயலியில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளது.
இந்த 'கூ' செயலி இந்தியாவில் இருக்கும் நம்மில் பலருக்கு தெரியாத நிலையில், நைஜீரிய அரசு இதில் அதிகார பூர்வ கணக்கு தொடங்கி, இனி அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் இனி 'கூ' மூலமாகவே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரிய அரசின் இந்த செயலுக்கு, 'கூ' செயலியை உருவாக்கியவர்களில் ஒருவரான ராதாகிருஷ்ணா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அதில், ' 'கூ' தளத்தில் இணைந்த நைஜீரிய அரசை வரவேற்கிறோம். 'கூ' தளம் தற்போது தனது சிறகை இந்தியாவை கடந்து பரப்பத்தொடங்கியுள்ளது' எனக் குறிப்பிடுள்ளார் இந்த நிகழ்வு தற்போது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.