'6 பாக்கெட்டுகள்'.. 'அசரவைக்கும் ஐடியா!'.. 'கடத்தல்' தம்பதியின் 'உள்ளாடை' ட்ரிக்!.. ஏர்போர்ட்டில் உறைந்து நின்ற அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் 2 வாரங்களுக்கு முன், துபாயில் இருந்து கோவை வந்த 'ஏர் இந்தியா' விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, தகவல் கிடைத்ததை அடுத்து, கோவை வந்த பயணியரிடம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்த, 46 மற்றும் 33 வயது மதிக்கத்தக்க தம்பதியின் நடவடிக்கை சந்தேகமூட்டுவதாக் இருந்ததால் , அவர்களது உடைமைகள் முதலில் சோதிக்கப்பட்டன. ஆனால் அப்போது எதுவும் கிடைக்காததால், மீண்டும் இருவரும் தனி அறையில் வைத்து சோதனை செய்யப்பட்டனர். அப்போதுதான், தங்கத்தை பொடியாக்கி, ரசாயனங்களுடன் கலந்து, அவற்றை பசையாக்கி ஆறு பாக்கெட்டுகள் கொண்ட உள்ளாடைகளில், எடுத்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த தம்பதியிடம் இருந்து, 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.16 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.
கடந்த மார்ச் மாதம், அரபு நாடுகளுக்கு சுற்றுலா சென்ற இந்த தம்பதியர், கொரோனாவால், கையில் இருந்த பணத்தை இழந்து, ஊர் திரும்ப முடியாத நிலையில் இருந்தபோது, ஒரு தங்கக் கடத்தல் கும்பல் இந்த தம்பதிக்கு உதவியது விசாரணையில் தெரியவந்தது. முன்னதாக இந்த தம்பதிக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவரையும் தற்போது கைது செய்ததுடன், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார் என்று விசாரித்து வருகின்றனர்.